CRUNCHY NOODLE CUTLET

V SUMITHRA
டிசம்பர் 17, 2015 08:00 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை

உருளைக்கிழங்கு - 2 பெரிது
பீட்ரூட் - 50 கிராம்
ஏதாவது ஒரு சுண்டல் - 1 கப்
வெங்காயம் - 1/2 கப்
கருவேப்பிலை,கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
கடலை மாவு - 3 அல்லது 4  ஸ்பூன்
நூடுல்ஸ் - மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்தது - தேவைக்கு
ரஸ்க் தூள் - தேவைக்கு
எண்ணை - பொரிக்க
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
சோள மாவு - 4 ஸ்பூன்
 

தயாரிக்கும் முறை

செய்முறை-

முதலில் பீட்ரூட்,உருளைக்கிழங்கு இரண்டையும் தோல் நீக்கி வேகவைக்கவும்.ஏதாவது ஒரு பயறு
ஊறவைத்து வேகவைக்கவும்.பின்னர் ஆறவிட்டு கையால் உருளை,பீட்ரூட் இரண்டையும் மசிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை,கொத்தமல்லி,சுண்டல்,பொடித்த நூடுல்ஸ் சேர்த்து உப்பு,மிளகாய்தூள்,கரம் மசாலாத்தூள் எல்லாம் கலந்து உருட்டவும்.சோளமாவில் நீர் விட்டு உப்பு சிட்டிகை சேர்த்து கரைக்கவும்.உருட்டிய காய்கறி உருண்டையை சோளமாவு கரைசலில் முக்கி
ரஸ்க் தூளில் பிரட்டி,எண்ணை காயவைத்து பொரிக்கவும்.
15 முதல் 30 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது