கொள்ளு ரசம்

V SUMITHRA
டிசம்பர் 15, 2015 07:50 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை -
 

கொள்ளு - 30கிராம்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
தணியா - 3 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் - 2

தாளிக்க -எண்ணை,கடுகு,கருவேப்பிலை,கொத்தமல்லி
மஞ்சள் தூள் - தேவைக்கு
புளி -பெரு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு

 

தயாரிக்கும் முறை

செய்முறை - 

கொள்ளை சிவக்க வறுத்து,1 ஸ்பூன் தவிர மீதியை வேக வைக்கவும்.பின் வாணலியில் துவரம் பருப்பு,
தணியா,மிளகு,சீரகம்,பெருங்காயம்,மிளகாய் எல்லாம் வறுத்து மீதி வைத்த கொள்ளுடன் சேர்த்து பொடிக்கவும்.புளியை நீர் விட்டு கரைத்து,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் வறுத்து அரைத்த ரசப்பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.உப்பும்,வேகவைத்த கொள்ளை சேர்க்கவும்.
ரசப்பொடி காரம் பார்த்து உபயோகிக்கவும்.கடுகு தாளித்து கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.கொள்ளு ரசம் சளி,ஆஸ்துமா,கொழுப்பு உள்ளவர்களுக்கும்,மழைக் காலத்துக்கும்
ஏற்றது.
உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்