முருங்கை கீரை தொக்கு

V SUMITHRA
டிசம்பர் 12, 2015 05:19 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை

முருங்கை கீரை - 1 கப்

கருவேப்பிலை - 1/4 கப்

புளி - எலுமிச்சம் அளவு

வெந்தயம் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 8

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணை -  ஒரு கரண்டி அளவு 

தயாரிக்கும் முறை

செய்முறை

முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலையை ஆய்ந்து,சுத்தம் செய்து,கழுவி துணியில் உலர்த்தவும்.

ஈரம் வடிந்தவுடன் வாணலியில் சிறிது எண்ணையில் புளி,மிளகாய்,கீரை வதக்கவும்.வெறும்

வாணலியில் கடுகு,வெந்தயம்,பெருங்காயம்  வறுத்து பொடிக்கவும். பின் நல்லெண்ணையில் கடுகு

போட்டு,வெடித்தவுடன்,அரைத்த விழுது மற்றும் கடுகு,வெந்தயப்பொடி,பெருங்காயம்  சேர்த்து

உப்பு சேர்த்து வதக்கவும்.சுருள வதங்கியவுடன் எண்ணை கசியும்.அப்போது இறக்கி ஆறவிட்டு 

எடுத்து வைக்கவும்.இதில் கீரைகள் நன்கு உலர்ந்து விட்டாலோ அல்லது வறுக்கும் போது

அதிகம் வறுத்து விட்டாலோ பொடி போல் ஆகிவிடும்.தொக்கு செய்ய  மொறு மொறு என காய

வைத்தல் கூடாது.பொடி செய்வதானால் அப்படி காய வைத்து கொள்ளலாம்.பச்சை மிளகாய்க்கு

பதில் வர மிளகாய் பயன்படுத்தலாம்.இதை சாதத்துடன் அல்லது தொட்டு கொள்ள

பயன்படுத்தலாம். கீரையில்,கருவேப்பிலையில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம்

உண்டு.எலும்புகளுக்கு பலம்.கீரைகளை சாப்பிடாக குழந்தைகளுக்கு இப்படி செய்து சாதம் தரலாம்.


 
உபயோகிப்பதை பொறுத்தது
30 முதல் 1 மணி வரை