புதினா சட்னி பொடி

V SUMITHRA
டிசம்பர் 12, 2015 05:05 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை - 

புதினா கட்டு - 2

கடலைப் பருப்பு - 100 கிராம்

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

வர மிளகாய் - 15

புளி - எலுமிச்சம் பழ அளவு

உப்பு - தேவைக்கு

பெருங்காயம் - சிறுதுண்டு
 

தயாரிக்கும் முறை


செய்முறை

         புதினா இலைகளை ஆய்ந்து,சுத்தம் செய்து துணியில் உலர்த்தவும்.அதற்கும் வாணலியில்

பெருங்காயம்,பருப்புகள்,மிளகாய்,புளி எல்லாம் ஒரு ஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்.பின் ஈரம்

காய்ந்த புதினா இலைகளை வாணலியில் வறுக்கவும்.புதினா இலைகள் ஈரமிழந்திருந்தால் பொடி 

நன்றாக நைசாக கூட  வரும்.பின் மிக்ஸியில் வறுத்த பருப்புகள்,மிளகாய்,புளி,புதினா இலைகள்

எல்லாம் சேர்த்து பொடிக்கவும்.இந்த பொடியை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.தொட்டு 

கொண்டும் சாப்பிடலாம்.
உபயோகிப்பதை பொறுத்தது
1 முதல் 1:30 மணி வரை