துயிலெழுப்ப 

Preethypriya
November 21, 2015 03:30 பிப
துயிலெழுப்ப 


குடத்துக்குள்ளிருந்து 
கூடம் வந்திருக்கின்றது 
இந்த அகல், 
கூரை ஏறத்துடிக்கிறது ,​​ 
கோழி பிடிக்க அல்ல, 
கூவும் சேவலாய் 
குவலயத்தின் துயிலெழுப்ப . 


புதிர் 

தீபம் என்பதும் 
தணல் என்பதும் 
நெருப்பின் 
இரு வேறு வடிவங்கள். 
காற்றைக் குவித்தால் 
அணைகிறது தீபம், 
உயிர்க்கிறது தணல். 
காற்று நெருப்பை 
அணைக்கிறதா,உயிர்க்கிறதா? 


யானை கட்டி தீனி போட்டு 

அங்குசத்திற்கு 
அடங்க மறுக்கிறது இந்த 
யானை. 
'மவுஸ் 'என்னும் அங்குசத்தால் குத்தி, 
'கீ போர்டால் ' 
உத்திரவு கொடுக்கிறேன் . 
ஆனாலும் அடங்க மறுக்கிறது 
இந்த கம்ப்பியூட்டர் யானை. 
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் 
வேண்டும் என்பதால் 
அந்த 
யானையைக் கட்டி 
தீனி போடுகின்றேன், 
வேறு என்ன செய்ய?