சாதி

முகில் நிலா
November 09, 2015 02:17 பிப
சாதி சாதின்னு சொல்லிச்
சொல்லி
சாக்கட நாத்தம் அடிக்கிது
வாரி வாரி கொட்டின பின்னும்
வஞ்சகத் தீதான் எரியுது....

தினவெடுத்து திரியுற கூட்டம்
கும்பிடு போட்டே நாட்டக் கெடுக்குது
திங்குற சோத்துக்கு உழைக்கிற வர்க்கம்
அடிமையாகத்தான் இன்னும் கிடக்குது....
விக்குற பொருளும் தரமா இல்ல
விலைவாசியோ குறைவதுமில்ல
வக்கத்தவன் வயிறு வளர்க்க வழியில்ல
இதுல சாதிவெறி மட்டும் இன்னும்
குறையல....

பேருக்கு பின்னாடி போட்டுக்க
அது என்ன பெருமையா?
உசுரு காக்க கொடுக்கையில் மட்டும்
பிரிவினை இல்லையா இரத்தம்?
அம்மனமாத்தான் பிள்ள பிறக்குது
அதுக சட்டைக்கு எதுக்கு லேபிளு?
அடிச்சு பிடிங்குறவன் வாழுற தேசம்
அதுல அவசியமா கை விலங்கு?

அவனுக்கும் உனக்கும் உறுப்புகள்
பொதுவே
அதுல ஒன்னு எச்சா இருந்தா
சொல்லு
அவன் முதுகுல சவாரி செஞ்சது போதும்
இனியாச்சும் சொந்த காலுல
நடந்து பழகு....

காரித்துப்பவும் எச்சில் கூசுது
உங்க கயமைத்தனத்த
கண்டு கண்டேதான்
நெஞ்சுல அக்கினி எரியுது......