இதோ! உங்கள் எழுத்துக்கு உரூபா 50000.00 பரிசில்

கா.உயிரழகன்
செப்டம்பர் 14, 2015 11:46 முப

வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில்...

http://www.ypvnpubs.com/2015/09/2015.html

என்ற எனது பதிவில் புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர் சந்திப்பு 2015 பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர்களது பத்துச் செயல் திட்டங்களுக்கு அப்பால் பதினொன்றாவதாக உரூபா 50000.00 பரிசில் மற்றும் வெற்றிக் கேடயம் வழங்கும் செயல் திட்டத்தை, புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான செயல் வீரர்கள் அறிவித்துள்ளனர்.

 

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“

“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“

...இணைந்து நடத்தும்...

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!

முதல் பரிசு ரூ.5,000

இரண்டாம் பரிசு ரூ.3,000

மூன்றாம் பரிசு ரூ.2,000

 

ஒவ்வொரு பரிசுடனும்

“தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) “ இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!

இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 

உங்கள் நா வண்ணம் போல, உங்கள் கை வண்ணத்தைக் காட்ட அழகாக வடிவமைத்த ஐந்துவகைப் போட்டிகளைக் கீழே தருகின்றேன்.

 

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகொளிரும் தலைப்போடு

 

போட்டி ஒழுங்குகள் (விதிகள்) பல உண்டு. அதில் "வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்." என்பதையே நான் விரும்பிப் போற்றுகிறேன்

 

புதிதாக வலைப்பக்கம் தொடங்கிப் போட்டியில் கலந்துகொள்வோருக்கு எனது முதன்மை வாழ்த்துகள். ஆயினும் அவர்கள் தொடங்கிய வலைப்பக்கத்தைத் தொடர்ந்து பேண நமது வலைப்பதிவர்கள் மதியுரை (ஆலோசனை) தருவார்கள் என உறுதிமொழி தருகின்றேன்.

 

என்னடா இந்தச் சின்னப்பொடியன் எப்பவும் இப்படித்தான்... படியெடுத்துப் பகிருவான், ஆனால் முழுமையாகத் தரமாட்டான் என்று குழம்பாதீர்... முழுமையாக, நிறைவாக (திருப்தியாக) தகவலறிந்து; போட்டியில் பங்குபற்றி, உரூபா 50000.00 பரிசில் மற்றும் வெற்றிக் கேடயம் பெற விரும்பும் எல்லோரும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி படிக்கலாம்.

http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html

 

"விரும்பும் எல்லோரும்" என்பதை விட எல்லோரும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் பங்கெடுங்க விரும்புங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

 

எழுத்து எல்லாம் நன்று - அதை

இன்று வெளிக்காட்டி

போட்டிக்கு அனுப்பிப்போட்டால்

கிட்டுவது பரிசில் மட்டுமா?

புகழும் அல்லவா கிட்டும்!

நீங்கள் பரிசில் பெற்றால்

சிறந்த படைப்பாளி என்றே - உங்களை

ஏற, இறங்கப் பார்ப்பாங்களே!

பரிசில்களுக்காக அல்ல

சிறந்த படைப்பாளி என்று - நீங்கள்

உங்களை அடையாளப்படுத்தவேனும்

இன்றே - உலகளாவிய

மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில்

பங்கெடுங்க விரும்புங்களேன்!