அய்யோ என் விஞ்ஞானமே விண்ணில் போச்சே...

நாத்திகன்.
ஆகஸ்ட் 25, 2015 09:55 பிப
அய்யோ...
என் விஞ்ஞானமே
விண்ணில் போச்சே...
அப்துல் கலாம்
இவர் அணுவை ஏந்திய அகிம்சாவாதி
உலகின் அமைதி ஒன்றே இவரது அகராதி
இவர் இந்திய விண்வெளியின் விடிவெள்ளி
சத்தமில்லாத சாமானியன் இவர்
சாதனை நிறைந்த சரித்திரம் இவர்

கனவுகள் காணுங்கள் என்று இளைஞசர்களுக்கு
கட்டளையிட்டவர் அவர்களின் மனங்களை
கட்டிப்போட்டவர்

அக்கினி சிறகு விறித்து இளைஞர்களின்
உள்ளங்களில் உலாவந்தவர்
கனவுகளுக்கே கனவை உறுவாக்கியவர்

உலக நாடுகளின் அச்சுருத்தல்களுக்கு
அதிசயம் நிகழ்த்தியவர் அவர்களின்
அச்சுருத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்

அறிவியலாய் திகழ்ந்த அவதாரம் இவர்
இவரே அமெரிக்காவின் சிம்மசெப்பனம்
அவர்கள் இவருக்கு காட்டிய சிம்மாசனம்
அதை சீன்டாவும் செய்யாத பாரதத்தின் அரியசனம்

இவர் அமெரிக்கா சென்ற போதெல்லாம்
அவமானப்படுத்த நினைத்து ஆடையை அவிழ்த்து
நிர்வானப்படுத்திய போதெல்லாம் இவர்
ஆனார் முற்றும் துறந்த ஞானி அவர்
எங்கள் நாட்டிற்கே தலைமை விஞ்ஞானி

உலகின் அனைத்து செயற்கை கோள்களுக்கும்
கண்ணைக்கட்டி விட்டு அணு ஆயுத சோதனையை
செய்து முடித்து உலகிற்கே கண்ணாமூச்சி
காட்டிய எங்களின் அறிவியல் களஞ்சியம் இவர்

இவர் தமிழில் பயின்று நாட்டின் தலைமகனானவர்
தலைக்கணமே இல்லாத உலகின் தலைமகன் இவர்
தன்னலமில்லாமே இல்லாத இத்தரணியின் பரணி இவர்
தரமான சிந்தனைகளின் தாரக மந்திரம் இவர்

மின்மினிப்பூச்சே இவரின் மின்சாரமாச்சி – வீதியின்
மின் விளக்கே இவரின் படிப்புக்கு சாட்சி
அதனால் தானோ என்னவோ வானமே
இவருக்கு எல்லையாச்சி அங்கே தான்
இவரின் விஞ்ஞானத்தின் சுயஆட்சி

இந்தியாவின் பொக்ரான் பாளைவனத்தை
விஞ்ஞானத்தின் சோலைவனமாக்கியவர்
உலகத்தின் உள்ளத்தை விளையாட்டு திடலாக்கி
விஞ்ஞானத்தின் வித்தைகளைக் காட்டியவர்

இந்தியாவின் தன்மானத்திற்கும் தலைநிமிர்விற்கும்
இவர் ஒருவரே மூலாதானம் – இவரின்
மூளையே உலகிற்கு தானம்

தினந்தினம் மாணவர்களே இவரது மூச்சாச்சி – அதனால்
மாணவர்களே இவரின் மனசாட்சி
இவரே மாணவ மனங்களில் ஆட்சி
அவர்களிடையே பேசிப்பேசியே மயங்கி விழுந்தாச்சி
அதனால் அவர் மூச்சே நின்னுப்போச்சி

இதுவே உலகம் முழுதும் பேச்சாச்சி
இந்தியாவின் இதயத்துடிப்பே நின்னுப்போச்சி
எல்லோரும் உருண்டு புரண்டு அழுதாச்சி – இனி
இவருக்குப் பிறகு வேறு யார் தான் – என்று
திக்கு முக்காடிப்போச்சி

அய்யோ என் விஞ்ஞானமே விண்ணில் போச்சே
இனி என்ன பேச்சி - இத்தோடு
என் மூச்சு நின்னுப் போச்சி

கண்ணீரோடு
அன்பரசன்