ராகநகை மீட்டுகின்றேன்…….!

சுந்தரேசன் புருஷோத்தமன்
ஆகஸ்ட் 14, 2015 02:12 பிபராகநகை மீட்டுகின்றேன்…….!


சங்கிலிக் கனவுகள் 
சல்லடைச் சன்னலில்
வில்லதன் அம்பெனச்
சீறி வரும்…..!

சத்தமில்லா மலென்
உள்வளர்ச் சங்கது,
என்மனக் காதலை
ஓத வரும்…!

நல்மனக் காதலன் 
கள்தரும் காதலை
புள்ளது பாடவே
தேடி வரும்…!

வாதமும் காதலின்
தேனதைக் கோதவென்
கார்குழல் தோளிலே
ஆடி விழும்…!

கைமுதற் கால்வரை
ஊறுமென் காதலை
வீணையின் தந்திகள்
பாடிடு மோ?

தீண்டினேன் தீண்டவும்
வீணையும் தந்ததே
நாயகன் நகைக்கின்ற
ஏழு சுரம்……!
 

+++++++++++++++++++++++++++++
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்