பாவை..

V SUMITHRA
ஜூலை 31, 2015 09:41 பிப

எங்கோ ஒரமாய்

இருந்த என்னை

மீன் விழி மானே உன்

விழி அம்புகள் வீசி

 இதயத்துக்கு வலை போட்டு

கண்களுக்குள் குடியேறினாய்

பாவை உன் மனதில்

ஈரம் இல்லாததால் என் விழிப்

பாவைத் தோண்டி ரணமாக்கி

ஈரங்கள் வடியச் செய்தாய்!