எச்சங்களாய்...

V SUMITHRA
ஜூலை 31, 2015 09:23 பிப

விழிகளில் வக்கிரங்கள்

சுமந்ததால்

வித்தியாசங்கள் மூளைக்குள்

வாழவில்லை!

வயதில் குழந்தை

உருவில் குமரி என

வாழும் கன்னியரெல்லாம் உங்களுக்கு

உணவாகிட 

எச்சங்களாய்

ஏழைப் பெண்களின் வாழ்க்கை!

காமப் பேய்களின் கண்களுக்கு

குழந்தைகள் கூட 

மாமிச வேட்டை தான்

இவர்களின் வேட்டையில்

சூறையாடப்பட்டது 

சிறிசுகளின் மகிழ்ச்சியே  தவிர!

பெரிதாய் ஒன்றும் இங்கே

பெயர்த்திடவில்லை நியாயங்கள்!

பெண்களே ஒடுக்கப்படும் 

பூமியில் 

கயவர்களுக்கு என்றும்

கொண்டாட்ட வைபவம் தான்!

பெண்ணை சாடிடும் இன்னொரு

பெண் இருக்கும் வரை எதுவும்

புதிதாய் உதிக்காது மாற்றங்கள்!