மாமனின் வரவுக்காய்....

மொழியற்றவள்
ஜூலை 20, 2015 06:24 பிப
எங்கதான் நீ போன
என் மாமா என்ன விட்டு?
யாரத்தான் நான் கேட்பேன்
உன்னப்பத்தி வாய்விட்டு?

பொருத்திருந்து பாத்தாச்சு
நீ வந்த தடம் தெரியலையே
தொண்டக்குழி விம்முறது
வெளிய சொல்ல வழியில்லையே.....

வார்த்தைக்கு வார்த்த நான்
வாயாடி நின்னாலும் நீ
வஞ்சுபுட்டு மறுபடியும்
கொஞ்சுவியே மாமாவே....!!!

கோபந்தான் பட்டாலும்
கொண்ட பாசம் மாறாம
கொடுத்து நீ என்னை
தேத்துவியே மாமாவே....!!!

நெஞ்சுக் குழி தகிக்குதடா
உன் நெனப்பால எனக்கேதான்
கண்ணு முழி பிதுங்குதடா
உன்ன காணாமத்தானேடா....!!!

ஊத்தி வச்ச காபித் தண்ணி
குடிக்கவும் நெனப்பில்லையே
ஏத்தி வச்ச தீபம் அதை
விடிஞ்சும் அணைக்கவும் தோணலியே...

பாத்தி கட்டி உன் நெனப்ப
நானே விதச்சுப்புட்டேன்
பாவி மக உன்ன நம்பி
தானே உயிர் வளர்த்தேன்....!!!

வாட விட்டு வாட விட்டு
வலி கொடுக்கிறியே மாமா
வாக்கப்பட்ட பாவத்துக்கு
துக்கப்பட வைக்கிறது சரியா மாமா?