துளி அமுதம்

V SUMITHRA
ஜூலை 17, 2015 06:48 பிப

தோல்விகளில்

தோள் கொடுக்கும்

தோழமைக்கு

வயதும்,அந்தஸ்தும்

தடையில்லை!

வெற்றி என்ற

விருந்தை ருசிக்க

முதல் துளி அமுதம்

தோழமையின் ஆதரவுக் கரங்கள்

தந்ததாய் இருந்தால்

மந்திரம் செய்த பாவையாய்

மனது

மீண்டும் போரிட்டு வெல்லும்!