அத்தை மகளே_2(2)

முகில் நிலா
ஜூலை 09, 2015 10:07 முப
குனிஞ்சு நின்னு
குளத்துல நீ
கோலம் போடுற...!!!

மறஞ்சிருந்து
பார்க்கும் என்
மனசத் திருடுற...!!!

மல்லிகப் பூ
சரத்துல நீ
என்ன கோக்குற...!!!

மயங்கி நின்ன
நேரம் பாத்து
மீனுக்கு இறையா வீசுற...!!!

கை வளையல்
சிணுங்குதடி
என்ன கண்டதுனால...!!!

கால் கொலுசு
பதருதடி நான்
பக்கம் வந்ததுனால...!!!

உன் பாவாட
நாடாவா எனக்கு
மாறத் தோணுது...!!!

பருவப் பொண்ணு
இடுப்ப கிள்ள
விரலு அலையுது...!!!

எனக்குன்னு
பிறந்தவ நீ
ஒருத்தி தானடி...!!!

உனக்குன்னு
வளர்ந்திருக்கேன்
மாமா முகத்த பாருடி...!!!

நான் தாலி கட்ட
யாரையாச்சும்
இனியும் கேக்கணுமாடி...???

நல்ல நேரம்
இதுக்குமேலும்
நாம பாக்கணுமாடி...???