சில்லென்ற காற்றொன்று சல்லென்று வீசுது

அஞ்சனா தேவி
ஜூலை 07, 2015 01:29 பிப

 

சில்லென்ற காற்றொன்று சல்லென்று வீசுது

சில்லென்ற காற்றொன்று சல்லென்று வீசுது
பச்சைக் காட்டினிலே -அதுதான்
பாப நாசத்திலே...
மீனொன்று துள்ளுது கொக்கொன்று தின்னுது
ஆற்று தண்ணியிலே - அதுதான்
தாமிர பரணியிலே...
பூக்களும் இருக்குது வண்டுகள் மொய்குது
பசுஞ் சோலையிலே - அதுதான்
பாப நாசத்திலே...
உற்சாக மிருக்குது சந்தோஷ மிருக்குது
மக்கள் மனதினிலே - அதுதான்
செந்தமிழ் நாட்டினிலே