எங்கே? எங்கே? எங்கே?

கவிச்சாரல்
ஜூன் 27, 2015 01:21 பிப
எங்கே? எங்கே? எங்கே?

பார்த்து ரசித்த பசுமையான இயற்கை எங்கே?

வெயிலுக்கு காற்று வீசிய பனையோலை விசிறி எங்கே?
தோழிகளுடன் விளையாடிய பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
கோகோ விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே?
கும்மி எங்கே?
கரகாட்டம் எங்கே?
கோலாட்டம் எங்கே?
கோலி குண்டு எங்கே?
தென்னை மட்டை கிரிக்கட் பேட் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே?
மட்டை ரெயில் எங்கே?
நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
சண்டை போட்டு உண்டு மகிழ்ந்த கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
ஆரஞ் மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
எலந்தை பழம் எங்கே?
கொடுக்காபிளிக்காய் எங்கே?
உப்பும் மிளகாபொடியும் கலந்த‌நெல்லிக்காய் எங்கே?
அஜிரனம் போக்கிய கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
பசு தந்த சீம்பால் எங்கே?
பனம் பழம் எங்கே?
விவசாய நிலங்கள் ஏங்கே?
மாட்டு வண்டி எங்கே?
மண் உழுத எருதுகள் எங்கே?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே?
விவசாயம் செய்த மனிதர்கள் எங்கே?
மூன்று போகம் விளையும் விளை நிலம் எங்கே?
நிலம் உழுத ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண்புழு எங்கே?
வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
வயலுக்கு கூடையில் சாதம் சுமந்து வந்த பெண்கள் எங்கே?
பழைய சோறும் சின்ன வெங்காயமும் எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே?
சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
குரங்கு பெடல் சைக்கிள் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
பனை ஓலை குடிசைகள் எங்கே ?
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?
அந்த குளங்களும் எங்கே?
ஓசையுடன் ஓடிய‌ காட்டறுகள் எங்கே?
வளைந்து நெழிந்து ஓடிய  கனாயில்கள் எங்கே?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
மோர் மத்து ?
கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?
தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?
கிணற்று ஊற்றுகள் எங்கே?
மண்பானை  நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
இனிமையாய் வருடி சென்ற தென்றல் எங்கே?
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?

எல்லாவற்றையும் விட.....
அன்பு எங்கே?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே?
மரியாதை எங்கே?
மருதாணி எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
வாசல் அலங்கரித்த கோலங்கள் எங்கே?
சானம் மெழுகிய தின்னைகள் எங்கே?
நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்குஎங்கே?

இதற்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியில் உலகம் தேடும் கூகுலினாலும்
கூட பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகித்தை தேடி இந்த
உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே? எங்கே? எங்கே?