ஹெராயின் பிடிபட்டது 600 கிலே - இந்தியப் பெருங்கடலில்

சண்முக லட்சுமி
ஜூன் 25, 2015 09:54 முப

இந்தியப் பெருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த ஆஸ்திரேலிய போர்க் கப்பல் ஒன்று 600 கிலோகிராம் ஹெராயினைக் கைப்பற்றி உள்ளது.அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் அரை பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும்.

முப்பது நாடுகளைச் சேர்ந்த கூட்டு கடல்சார் பாதுகாப்பு படையினர் இந்த அளவுக்கு ஹெராயினை கைப்பற்றியுள்ளது இதுவே 2வது முறையென்று ஆஸ்திரேலியக் கடற்படையினர் கூறுகின்றனர்.

அந்தக் கூட்டு கடற்சார் பாதுகாப்பு படையினர் மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங் கடலில் கடற் கொள்ளையை தடுப்பதிலேயே பிரதானமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கிழக்கு ஆப்ரிக்க கடற்பரப்புக்கு அப்பல் நடுக்கடலில் இந்த மறிப்புச் தோனனையில் தமதுகடற்படையின் கப்பல் ஈடுபட்டதுஎனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.