சிரிக்க கொஞ்சம்

சண்முக லட்சுமி
ஜூன் 24, 2015 08:19 முப

 

 

டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?

நல்லா இருமலாம்.

 

 

மந்திரியாரே! நால்வகை சேனைகளும் போருக்குத் தயாராகிவிட்டனவா?

பேருக்குத் தான் தயாராகி உள்ளன மன்னா!

?!!!

 

இப்ப எதுக்கு ஊரில் இருந்து உங்க அம்மாவை வரச்சொல்றே?

நீங்கதானே சொன்னீங்க! மாமியாரை தாயா பார்த்துக்கணும்னு! வரசொல்றேன் பார்த்துக்கங்க!

 

மந்திரியாரே போருக்கு புறப்படவேண்டும் சகுனங்கள் சரியாக இருக்கிறதா?

சங்கு ஊதிவிட்டார்கள் மன்னா!

 

 

மனைவிகிட்ட அடிவாங்காம இருக்கிறதுக்கு பூரிக்கட்டையை ஒளிச்சு வைச்சது தப்பா போச்சு!

ஏன்?

பூரிக்கல்லாலே அடிக்க ஆரம்பிச்சிட்டாய்யா!

 

லோன் வாங்கி கட்டியும் திரும்ப லோன் தரமாட்டேங்கறாங்களா? ஏன்?

லோன்வாங்கி வீட்டை கட்டினேன் லோனை கட்டலையே!

 

திருஷ்டிபூசணிக்காயை சுத்தி ஒடைச்சாங்களே! திருஷ்டி எல்லாம் கழிஞ்சி போச்சா?

தெருவுல போன ரெண்டு பேரோட கால்தான் நசிஞ்சு போச்சு!

 

இடைத்தேர்தல்ல  போட்டியிட வேண்டாம்னு  தலைவர் ஏன்  பிடிவாதம் பிடிக்கிறார்?

இதுவே கட்சிக்கு கடைத் தேர்தலா ஆயிடப்போவுதுன்னு ஒரு பயம்தான்!

 

கால் அமுக்கிவிடாம என் மனைவி தூங்கவே மாட்டா?

இந்த காலத்திலேயும் இப்படி இருக்காங்களா?

நீ வேற நான் அவ காலை அமுக்கி விட்டாத்தான் அவ தூங்குவான்னு சொல்ல வந்தேன்!

 

எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் பதினோரு மணிக்கு மேல தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர்!

படுக்கிற இடத்தை மாத்தி பாருங்களேன்!

ஆபிஸ்ல சீட்டை எல்லாம் மாத்த முடியலை டாக்டர்!

 

நம்ம கல்யாண நாளை நீங்க எப்படி மறப்பீங்க?!

நீதானே வாழ்க்கையிலே வர்ற துன்பங்களை கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு சொன்னே!

 

என்னம்மா சொல்றீங்க! உங்க பையன் ஆயிரம் ரூபாயை முழுங்கிட்டானா எப்படி?

பையன் ஒரு ரூபாயை முழுங்கிட்டான்! அதை எடுக்க டாக்டர் ஆயிரம் ரூபாயை பீஸா முழுங்கிட்டாரே!

 

உங்க கதைகளை படிக்கும்போதே சொக்கிப் போயிடறேன்னு சொல்றீங்களே அவ்ளோ உயிரோட்டமாவா இருக்குது!

நீங்க வேற தூக்கம் சொக்கிட்டு வருதுன்னு சொல்றேன்!

 

மன்னா! எதிரியிடம் இருந்து ஓலை வந்திருக்கிறது!

அப்படியானால் ஓடி ஒளியவேண்டிய வேளை வந்துவிட்டது என்று சொல்லுங்கள்!