பாகிஸ்தானில் கடும் வெயில் - பலி 120க்கும் மேல்

சண்முக லட்சுமி
ஜூன் 22, 2015 07:29 பிப

பாகிஸ்தானில் கடும் வெயில் - பலி 120க்கும் மேல்
பாகிஸ்தானில்  இருக்கும் சிந்து மாகாணத்தில் கடும் வெப்பம் இருந்த காதணத்தால் 120க்கும் மேற்பட்டவர்க்ள பலியாகியுள்ளனர். கராச்சியில் 113 டிகிரி வெப்பம் நிலவியது. இச்சமயத்தின் மின் பற்றாக்குறையும் இருந்தது. இந்த வெப்பத்தின் கொடுமை தாங்க முடியாத பெரியவர்கள் இறந்ததாக் தெரிகிறது. சனிக்கிழமையிலிருந்து கராச்சியில் 114 பேர் இற்நதுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 8பேர் இறந்துள்ளனர். கடும் வெப்பத்தால் பாதிக்கபட்ட நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனைகளை நாடியுள்ளனர் 1979ல் 117டிகிரி இருந்த வெப்பநிலையே இதுவரையிலும் இருந்ததில் அதிகமாகும். கடந்த மாதம் இந்தியாவில் 1700 பேர் வெப்பத்தின் காரணமாக மரணமடைந்தது அனைவரும் அறந்ததே.