வெறிநாய் கடிக்கு ஏராளமானோர் பலி - இந்தியாவில் !

சண்முக லட்சுமி
ஜூன் 22, 2015 07:07 பிப

 

 வெறிநாய் கடியால் வரும் ரேபிஸ் நோயால் வருடத்திற்கு 59 000 பேர் பலியாவதாக பிரிட்டன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வெறிநாய் கடியால் இந்தியாவில் வருடத்திற்கு 20 000க்கும் மேல் பலியாவாதாக அநத ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய் தாக்கம் உள்ள மிருகங்கள் கடித்தால் அதன் எச்சில் மூலமாக அந்த நோய் மனிதர்களுக்கு பரவி விடுகிறது. வெறிநாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசி மருந்துகளை தாரளமாகவும் விலை மலிவாகவும் கிடைக்க வகை செய்ய வேண்டுமென அந்த ஆய்வறிக்கை தெரியப்படுத்துகிறது.