சட்ட விரோதமாக யானைகள் வேட்டை எண்ணிக்கை 50 000 க்கும் மேல், மதிப்பு மிக்க தந்தத்திற்காக!

சண்முக லட்சுமி
ஜூன் 22, 2015 06:50 பிப

ஆப்பிரிக்காவின் தான்சானியா, மொசம்பிக் ஆகிய இடங்களில் அதிகமாக யானைகள் கொல்லப்படுவாதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள். மதிப்பு மிக்க தந்தங்களுக்காக சட்டவிரோகமாக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

சட்டவிரோத கடத்தலின்போது பிடிபடும் யானை தந்தங்களின் மரபணுக்குளையும், காட்டில் காணப்படும் யானை சாணங்களில் இருக்கும் மரபணுக்களையும் ஒப்பிட்டுப்பார்த்து யானைகள் மிகவும் அதிகமாக கொல்லப்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

2013ம் ஆண்டில் மட்டும் 50,000க்கும் அதிகமான யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக தெரிகிறது.விஞ்ஞானிகளின் இந்த புதிய புள்ளிவிவரங்கள் சயன்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.