நண்பர் வினோத்துக்கு வாழ்த்துகள்.

கா.உயிரழகன்
ஜூன் 09, 2015 11:33 பிப

தோழி பூங்கோதை செல்வன் அவர்களது முகநூல் பக்கத்தில் "தமிழ்நண்பர்கள் இணையத்தளத் தலைவர் நண்பர் வினோத்துக்கு நண்பர்கள் அன்போடு வழங்கிய பரிசு!" என்ற ஒன்றைக் கண்டேன்.தமிழ்நண்பர்கள் தள நிறுவுனர் நண்பர் வினோத்துக்கு தமிழ்நண்பர்கள் எல்லோரும் மேலும் மேலும் ஒத்துழைப்போம்.
அவரது பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

சான்று: https://www.facebook.com/photo.php?fbid=1143264739033067&set=a.1143270935699114&type=1

 

தோழி பூங்கோதை செல்வன் அவர்களது பயணத் தொடரைப் படித்ததும் தமிழ்நண்பர்களின் நட்பை என் உள்ளம் நிறைவோடு பாராட்டுகின்றேன். உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் அன்பாலும் தமிழாலும் அணைக்கின்ற தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகளை மறக்க இயலாது. அவர்களின் நினைவு என்னில் வந்தால், அடுத்த தடவை தமிழ்நாடு போய் சந்திக்கலாம் என உளமாறுவேன். தமிழகத்தில் வலைப்பதிவர் சந்திப்பு ஆண்டு தோறும் நிகழ்வது போல தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகள் சந்திப்பு நிகழ்த்தலாம் என்றும் எனது உள்ளத்தில் தோன்றும். தோழி பூங்கோதை செல்வன் அவர்களது ஆதரவு பல தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகளுக்கு ஊக்கம் தந்ததாகச் சொல்வதைக் கேட்டு நான் பெருமைப்படுகிறேன். தோழி பூங்கோதை செல்வன் அவர்களது ஆதரவு தொடர்ந்தும் தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகளுக்கு கிட்டுமென நம்புகின்றேன்.