அத்தை மகளே_பாகம்_2(1)

முகில் நிலா
May 19, 2015 03:34 பிப
கண்ணாடி வளையலத்தான்
கை நிறைய போட்டிருக்க
கடுதாசி போடுதடி நீ
கை அசைச்சு நடக்கையிலே....

விண்மீனை ஒட்டவச்ச
மூக்குத்தி மின்னுதடி
விதவிதமா நீ செய்யும்
குறும்புகளோ என்னை கொல்லுதடி....

ஆத்தோரம் வீசிவரும்
காத்துக்கு தாவணியோ
கை தாண்டி பறக்கையிலே
எனக்குள்ள கலவரமே நடக்குதடி...

இத்தூணூன்டு இடுப்புலதான்
மடிப்பு ஒன்னு தெரியுதடி
அந்த மடிப்புலதான் என் மனசு
குடித்தனமே பண்ணுதடி....

பாதம் வச்ச எடத்திலெல்லாம்
பவளம் போல தெரியுதடி
பாதையில கிடந்த மண்ணும்
உன் பாதம் பட கெஞ்சுதடி.....

மிஞ்சி மிஞ்சி வந்து விழும்
உன் கூந்தலைத்தான்
தள்ளி விட்டே உன் விரலோ
தனிக்காதல் செய்யுதடி....

காடு மேடு சுத்தி வந்தும்
களப்பு மட்டும் வரலியேடி
உன் கண் பட்ட தூரத்துல
நான் வாழும் சுகத்துக்கு ஏது எல்லையடி?