பாரதி கண்ட புதுமைப் பெண்

rupan
May 13, 2015 07:05 முப

ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன்

வெற்றித் திலகமிட்ட வீர மங்கை

தன்நம்பிகை தளராத மன உணர்வுடன்

வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு

வெள்ளைக்காரனை புறமுதுகு காட்டி

ஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட

புதுமை பெண் அல்லவா

அவள்தான்  வீர மங்கை வேலு நாச்சியார்.

 

அன்று  சொன்னான் சமைக்கும்

கரங்களும் சரித்திரம் படைக்கும்

அதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல்

தற்கால யுகத்தில் ஆணுக்கு பெண்

சரி நிகராக வாழும் காலம் கண் முன்னே

கடவுள் சாட்சியாக விரிகிறது.

உழைப்பின் சுகமறிந்த பெண்கள்

இன்று வானளவில்கொடிகட்டிபறக்கிறார்கள்.

 

 

வண்ண சேலை கட்டி வலம்வரும் பெண்கள்.

தங்களின் தாய்நாட்டுக்கவும்.தன்மானத்துக்காவும்

அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது  வானிடிந்த போதிலும்

துச்சமில்லை தங்களை தாங்கள் அர்(ப்)பணிக்கிறார்கள்.

பித்துப்பிடித்த  சில ஆண்கள் விந்தையான பார்வையாள்

காம சுகத்துக்கு கருகி மாண்டவர்கள் எத்தனை.

மூடர்கள் என்று நினைக்கும் பெண்கள் -இன்று

மறவர்கள் என வாழும் பெண்கள் எம் பாரதி கண்ட பெண்கள்.

புதுமைப்பெண்……அல்லவா.