ஓட்ஸ் பாசிப்பருப்பு பாடீஸ்

V SUMITHRA
ஏப்ரல் 23, 2015 07:54 பிப

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1/2 கப்

பாசிப்பருப்பு  - 150கிராம்

(வறுத்து கொரகொரப்பாக 

பொடித்தது)

வெங்காயம் - சிறிது

இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறுது

பச்சைமிளகாய் துண்டுகள் - சிறிது

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய்த் தூள் - - 1ஸ்பூன்

கரம் மசாலா  - 1 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

நீர் - தேவைக்கு

எண்ணைய் -பொரிக்க

 

தயாரிக்கும் முறை

பாசிப்பருப்பை வாணலியில் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.பின் ஓட்ஸை நீர் தெளித்து ஊறவைத்து

அதோடு பாசிப்பருப்பு மாவு,வெங்காயம் ,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,இஞ்சி பூண்டு

விழுது,மிளகாய்த்தூள்,மசாலாத்துள்,மஞ்சள் தூள், உப்பு எல்லாம் சேர்த்து பிசைந்து,வட்டமாக வடை போல் செய்து

எண்ணையில் பொரிக்கவும்.ஓட்ஸ் பாடீஸ் தயார்.

உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்