அத்தை மகளே

முகில் நிலா
ஏப்ரல் 06, 2015 09:41 முப

சிக்கெடுத்து சீவுறேன்னு

சீனப் போடுற!!!!

சின்னப் புள்ள என்ன கண்டா

சிரிச்சு மழுப்புற!!!

 

விம்மி விம்மி அழுவதுபோல்

நடிச்சுக் காட்டுற!!!!

பம்மி பம்மி பக்கம் போனா

பதறி ஓடுற....!!!

 

நகத்த கடிச்சு துப்புறதா

நாணம் காட்டுற....

உதட்ட சுளிச்சு என்ன ரொம்ப

உசுப்பு ஏத்துற....

 

வீம்பு காட்டி வீரமாத்தான்

விலக்கிப் போகுற

விட்டுப் போனா கண்ணாலதான்

நீ வலைய வீசுற....

சப்புக்கொட்டி சாம்பாருல

உப்ப பாக்குற

சங்கடமே பாக்காமத்தான்

பார்வையில வெண்ணி ஊத்துற.....

 

சன்னலுக்கு திறைய போட்டு

இழுத்து மூடுற...

சமயம் பாத்து விலக்கிவிட்டு

நோட்டம் போடுற.....

 

காட்டு மல்லிப் பூவப்போல

வாசம் வீசுற

கையிருந்தும் தொட்டிடாம

என்ன கட்டிப்போடுற,,,,,