பச்சை பயறு பாப்படி

V SUMITHRA
ஏப்ரல் 03, 2015 01:14 பிப

தேவையான பொருட்கள்

பச்சை பயறு - 250கிராம்

உடைத்த கடலை - 250கிராம்

ஓமம் - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

வெண்ணைய் - 25கிராம்

பொரிக்க - எண்ணைய்

தயாரிக்கும் முறை

பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து அதனுடன் ஓமம் மற்றும் உடைத்த கடலை சேர்த்து மாவு மில்லில்

கொடுத்து அரைத்து வரவும்.சலித்து மாவை வெண்ணைய்,உப்பு சேர்த்துக் குழைத்த கலவையுடன் சேர்த்து கலந்து

நீர் ஊற்றி பிசையவும்.பின்,ரிப்பன் நாடா அச்சில் பிழிந்து எண்ணையில் பொரிக்கவும்.பொரித்த நாடாவை உதிர்த்தால்

பாப்டி தயார்.காரத்துக்கு விரும்பினால் பச்சைமிளாகாய் அரைத்து நீரில் கலந்து வடிகட்டி அதில் மாவு

கலக்கலாம்.இல்லை மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்

30 முதல் 1 மணி வரை
உபயோகிப்பதை பொறுத்தது