மாமன்காரன்

செந்தமிழ்தாசன்
ஏப்ரல் 02, 2015 04:19 பிப

அடி வயசுப்புள்ள நீயும் சுகமா

உன்ன கட்டிக்கிட ஆவணியல தேதி குறிக்கட்டும்மா

மாமன்காரன் தானே உன்மனசு போலதானே

நாமசேரப்போகும் சேதி வெகுசீக்கிரத்தில் தானே

 

உன்ன பாத்த கண்ணுரெண்டும் ஒய்யாரம்மா ஆடிக்கிட்டு

சுத்தி சுத்திப் பாக்குதடி கண்ணம்மா

எல்லா இடமும் நீ இருக்கிற பொன்னம்மா

அது கடவுளில்ல காதலடி செல்லம்மா...

 

நாலுகாலு பாய்ச்சலில ஓடிவரும் குதிரைபோல

மனசும் தானே எஞ்சினாக இருக்குது அது

ஓயாம உம்பேரச்சொல்லி துடிக்குது அதுல நீயும்

பாக்கும்பாா்க்கும் பாா்வை ஆயிலாக கலக்குது...

 

வட்டகோண பொட்டலழகி வட்டிசெம்பு வௌக்கும்போது

பாத்திரத்தில என்முகமும் தொியுதா

என்கையிபட்ட வேகத்தில கண்ணமும்தான்

செவக்குதடி கண்டுக்கிட்டேன் மயிலழகி நானும்தான்...

 

வச்சகண்ணு மாறாம வச்சு வச்சு பாக்குறன்டி

வயித்துக்குள்ள கெவிலிச்சத்தம் கேட்குதா

திருகாணி போல நீயும் திருகி திருகி

மனசுக்குள்ள துறுவி துறுவி வந்துபுட்ட தேனம்மா...

 

சோப்புசீப்பு கண்ணாடி உன்கொசுவத்தில என்னாடி

அத்தமகன் தந்த வெத்தலபாக்குத்தான் நீ

போட்டுக்கிட்டா செவக்குதடி உதடு ஜோக்குத்தான்

அதுபோல சோ்ந்திடலாம்  ரெண்டுபேரும் கூட்டுத்தான்...