ஈழம்......

கவிதாயினி
மார்ச் 13, 2015 09:34 முப

ஈழம்......
*********
ஈழம் என்றாலே ஆயிரக்கணக்கான மனிதர்களின் 
பிணக்குவியலின் காட்சிமட்டுமே வந்து நிற்கிறது கண்களில்..!


ஈழம் என்பது ஒரு இடத்தின் பெயர் என்று 
சொல்லும் நிலையை உயிர்களை பிணக்குவியல்களாய் மாற்றிய 
மிருகங்களின் வாழ்விடம் என்றே சொல்ல தோன்றுகிறது....!

ஈழதிற்காக போராடி கொடுத்தது வெற்று சதைகள் மட்டுமல்ல 
அவர்களின் ஆசை இலட்சியம் கோபம் துன்பம் இப்படி 
இன்பம் என்ற வார்த்தையை அனுபவிக்கமுடியா ஏமாற்றங்களும்தான்....!

பிறக்கும் குழந்தை அழுதுகொண்டே பிறக்கும் 
வெளிச்சத்தை முதன் முதலில் பார்ப்பதால் 
ஆனால் என் ஈழத்து பிஞ்சுகள் அடிமை தனத்தை 
பார்த்து அதை ஒழிக்கவந்த போராளியாகவே மாறிப்போனது...!


தவறு செய்தவர்கள் தடையங்கள்கூட இன்றி அழிக்கப்பட்டது 
நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டதாலா..? 
இல்லை அவளையும் விலைபேசி விட்டார்களா...?

சட்டம் என்ற சமூகத்தில் 5 அறிவு ஜீவன்களுக்குகூட நீதி கிடைக்க வழியுண்டு 
என் ஈழத்து தமிழனுக்கு இல்லாமல்போனது ஏனோ..?

மிருகங்களை காட்டிலும் தாழ்ந்தவராய் முடிவெடுத்துவிட்டனரோ ஈழத்து இனங்களை
இன்னும் என்ன விஞ்சி நிற்க்கிறது அங்கே உங்கள் ஆளுமையை காட்ட...!

இனி எத்தனை பெயர் பட்டியல் தெரியா பிரபாகரன் வந்தாலும்
ஈழத்தில் இடிக்கப்பட்ட மாண்டுபோனோரின் கற்பனை கோட்டை குவியலை 
திருப்பி பெறமுடியுமா...?

ரேவதி.........