அத்தை மகளே _ 32

முகில் நிலா
மார்ச் 11, 2015 10:54 பிப
நெஞ்சுக்குழி மேல
உன் நினைப்ப நட்டு வச்சேன்
நெற்றிப் பொட்டு போல
நீ என்ன ஒட்டிவந்து நின்ன...

பருத்திப் பூப்போல நீ
பளிச்சினு சிரிச்ச
பக்கம் வந்து வந்தேதான்
என் பார்வையை நீ பறிச்ச...

சின்னப்பொண்ணு நீ என்னத்தான்
சில்லறையா முடிஞ்ச
சிரிச்சுப் பேசிப் பேசித்தானே
என்ன சிறை எடுக்க துணிஞ்ச.....

தட்டு வண்டி மேல நானும்
தட்டானப் போல பறந்தேன்
தங்க நிற உன் இடுப்பப் பாத்துத்
தாவி கீழ விழுந்தேன்.....

கோர்த்து வச்ச பாசி மணி போல
நீ சேர்த்து சேர்த்து பேசும் பேச்சு
கேட்டபடி நான் கிறங்கி கிடக்க
நீ கேணித் தண்ணியே தான்
நானே மொண்டு குடிக்க....

மெட்டுக்கட்டி புழுதிக் காட்டில்
மேடை கட்டி நான் பாட
சலங்கை ஏதும் கட்டிடாம
நீ சந்தம் கேட்டுத்தான் ஆட....

ஊத்துக்குளி வெண்ணையாட்டம்
கன்னம் ரெண்டும் மின்னுதிப்போ
உன் கை விரல தொட்டாக்கூட
கரண்டு சாக்கு அடிக்குதப்போ....

மேளம் தாளம் தேவையில்ல
நான் கட்டிடுவேன் வாடி பெண்ணே....
தாலி சரடு கட்டின பின்னே
நான் கத்துதாரேன் பாரடி பின்னே....!!!!