"தாய்மை"

கவிதாயினி
மார்ச் 10, 2015 12:54 பிப

தாய்மை.....
*****************
மலடி என்ற பட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்த வார்த்தை "தாய்மை"

தாரமாக்கியவருக்கு தகப்பன் தகுதிகொடுத்து என் "தாய்மை"

பிரிந்து சென்ற உறவுகளை ஒட்டவைத்த பாலம் "தாய்மை"

நான் உயிர்பெற்ற நாள்முதல் இதுவரை யாரும் 
அழைக்கமுடியா உறவுக்கு சொந்தமாக கிடைத்த வரம் "தாய்மை"

வாழ இருப்பிடம் தராத உறவுகளில் 
நீ வாழ என் கருவரையை தர வைத்த உறவு "தாய்மை"

அம்மா என்று அழைக்கும் வார்த்தைக்கு 
அடிமையாகிப்போக வைத்த உறவு "தாய்மை"

ஆழி பேரளை எனும் அரக்கனுக்கு நான் இரையாகினாலும் 
உன்னை அடைகாத்து வீசி எரிந்து உயிர் பிழைக்க
எண்ணிய தருணத்திலும் வலிக்க வைத்த எண்ணம் 
வீசி எரிந்ததில் வலித்திருக்கும் உனக்கு என உணரவைத்தது என் "தாய்மை"....


ரேவதி....