ஆரஞ்சு மார்மலேட்

V SUMITHRA
மார்ச் 03, 2015 03:13 பிப

தேவையான பொருட்கள்

ஆரஞ்சுப் பழம் - 1

சர்க்கரை - 1/2 கப்

நீர் - 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஆரஞ்சைக் கழுவித் துடைத்து, மேல் பக்கம், கீழ்ப் பக்கம் சிறிது வெட்டி, ஆரஞ்சை இரண்டாக வெட்டி, அந்த இரண்டையும் 8 ஆக வெட்டி, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

வாணலியில் ஆரஞ்சு விழுது, நீர், சர்க்கரை எல்லாம் சேர்த்துக் கொட்டிக் கிளறவும்.

15 நிமிடங்கள் கழித்து இறக்கி ஆற வைத்து ப்ரிட்ஜில் வைக்கவும்.

பிறகு சாப்பிடலாம்.

சப்பாத்தி, பூரி மேல் ஸ்பிரெட் செய்து சாப்பிடலாம்.

15 முதல் 30 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது