காலி ப்ளவர் பீஸ் புலவ்

V SUMITHRA
மார்ச் 02, 2015 03:19 பிப

தேவையான பொருட்கள்

காலிப்ளவர்  வெந்நீரில் போட்டு அலசி பொடியாக நறுக்கியது - 1 கப்

பச்சைப் பட்டாணி - 1/2 கப்

பாசுமதி அரிசி - 1 கப்

வெங்காயம் - 1

இஞ்சி,பூண்டு விழுது - 1ஸ்பூன்

தக்காளி - 1 பெரியது

பட்டை.லவங்கம்,ஏலக்காய் - தாளிக்க

தேங்காய் பத்தை - 2

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

மசாலாத்தூள் - 1 ஸ்பூன்

புதினா - 1பிடி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவையான அளவு

அலங்கரிக்க

வறுத்த முந்திரி, கொத்தமல்லி,வட்டமாக நறுக்கிய 

வெங்காயம்,தக்காளி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ி

தயாரிக்கும் முறை

வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.இதிலிருந்து இரண்டு ஸ்பூன் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,தேங்காய் எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ப்ரஷர் குக்கரில் எண்ணை விட்டு,லவங்கம்,பட்டை,ஏலக்காய் தாளித்து,அரைத்த விழுதைப் போட்டு வதக்கி

எஞ்சிய வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும். பிறகு காலிப்ளவர்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகுதூள்,கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.பிறகு உப்ப,புதினா இலைகள் சேர்த்து

பத்து நிமிடம் ஊறவைத்த பாசுமதி அரிசியைக் கழுவி காய்கறிகளுடன் வதக்கி,1 1/2 கப் தண்ணிர் தேர்த்து

ப்ரஷர் குக் செய்யவும்.வறுத்த முந்திரி,கொத்தமல்லி,வட்டமாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி ஆகியவற்றால்

அலங்கரித்து,தயிர் பச்சடி அல்லது சாஸூடன் பரிமாறவும்.

உபயோகிப்பதை பொறுத்தது
30 முதல் 1 மணி வரை