நீரைத்தேடி.........

கவிதாயினி
பிப்ரவரி 28, 2015 11:57 முப

நிஜமெது நிழலெது 
விளங்குவதற்க்குள் வியர்த்துவிடுகிறது.....

இயற்க்கையை விஞ்சிவிடுகிறது 
இவனின் காகிதப்பூக்கள்....

இரைதேடி அளைந்து சிறகு வலிக்க 
இங்கேவந்தேன் தாகம் தீர்க்க 
இது நிழலள்ள நிஜம்....

பூக்கள் நிழலாக இருந்து ஏமாற்றுகிறது.....
பூமி நிஜமாக இருந்து ஏமாற்றுகிறது.....

வரண்ட பூமியாய் ஆக்கிவிட்டான் மனிதன்
தாகத்திற்க்குக்கூட நீரின்றி  நாங்கள்.....

 

ரேவதி......