சன்னா முறுக்கு

V SUMITHRA
பிப்ரவரி 27, 2015 07:03 பிப

தேவையான பொருட்கள்

வெள்ளை சன்னா - 1/4 கிலோ

அரிசி - 1/4 கிலோ

வெண்ணைய் - 50 கிராம்

உப்பு - தேவைக்கு

பெருங்காயம் - சிறிது

சீரகம் அல்லது ஓமம் - சிறிது

எண்ணைய் - பொரிக்க

 

தயாரிக்கும் முறை

சன்னா ,அரிசி இரண்டையும் சேர்த்து மில்லில் மாவாக அரைக்கவும்.வெண்ணைய், உப்பு சேர்த்து நுரைக்கத் தேய்த்து,அதில் மாவைக் கொட்டி  பெருங்காயம்,ஓமம் அல்லது சீரகம்  கலந்து நீர் சேர்த்து பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணையில் பிழியவும்.பொரிந்ததும் எடுக்கவும்.

உபயோகிப்பதை பொறுத்தது
30 முதல் 1 மணி வரை