என் அகத்தானே...

vaishu
பிப்ரவரி 26, 2015 09:56 பிப
எதிர்பாராத நிகழ்வுகளால்
வாழ்வின் மாற்றம் ...
எக்கணம் என்றே
தெரியவில்லையே ...

என் காதல் அறிந்தும்
உன் மௌனம் ஏனோ ...
சொல் கேட்க அல்லவோ
தவிக்கிறேன் ...

எதுவும் அமையும்
எனும்போது கூட ...
மனம் வேண்டாததை
தடுக்க பூஜிக்கிறது ...

ஒருபொழுது எனை நீ
அழைக்கிறாய் சிரிக்கிறாய் ...
மறுபொழுது மறத்தளித்தாலும்
என இழுக்கிறாய்..

களிப்பையும், கலக்கத்தையும்
மாறி மாறி வழங்குகிறாய் ...

என் அகத்தானே...

புறம் தள்ளி விடுவாயோ விடுத்து
அகப்பூ மலர செய்வாயோ ...

- வைஷ்ணவ தேவி