பொறித்த ரசம்

V SUMITHRA
பிப்ரவரி 26, 2015 02:03 பிப

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 50கிராம்

தணியா- 3 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

மிளகாய் - 2

பெருங்காயம் - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

தாளிக்க 

கடுகு,கறிவேப்பிலை,கொத்தமல்லி,நெய்

உப்பு - தேவைக்கு

நீர் - தேவைக்கு ஏற்ப

 

தயாரிக்கும் முறை

முதலில் துவரம் பருப்பில் 1 ஸ்பூன்,தணியா - 3 ஸ்பூன்,மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1/2 ஸ்பூன்,மிளகாய் - 2 இவற்றை சிறிது எண்ணையில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.மீதி துவரம் பருப்பை வேக வைக்கவும்.பின்னர் அரைத்த ரச விழுதில் நீர் கலந்து கரைத்து,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்தப் பிறகு வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து கலக்கி இறக்கவும்.நெய்யில் கடுகு,கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து தாளித்துக் கொட்டவும்.இதில் புளி ,தக்காளி சேர்ப்பது கிடையாது.

இதை பிராமணர்கள் முழு விரதமிருந்து அடுத்த நாள் உணவு உண்ணம் போடு எடுப்பார்கள்.காரணம் விரதமிருப்பதால் ஏற்படும் அமிலத்தன்மையை சரிசெய்யவும்,புளி சேர்க்காமல் இருப்பதால் அமிலதன்மை அதிகரிக்காது.செறிமானம் சரியாக இருக்கும்.

1-5 நபர்கள் வரை
5 முதல் 15 நிமிடங்கள்