ஆரஞ்சு ரசம்

V SUMITHRA
பிப்ரவரி 23, 2015 08:06 பிப

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு ஜசு -  1/2 கப்

தக்காளி  - 4 பெரிசு

துவரம் பருப்பு -  2 ஸ்பூன்

தணியா - 4 ஸ்பூன்

மிளகு -  2ஸ்பூன்

சீரகம்- 1 ஸ்பூன்

மிளகாய் - 4

மஞ்தள் தூள் - 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

நீர்இ

தாளிக்க 

கடுகு,நல்லெண்ணை,பச்சை மிளகாய் - 1

அலங்கரிக்க

கருவேப்பிலை,கொத்தமல்லி

தயாரிக்கும் முறை

ஆரஞ்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் பருப்பு,தணியா,மிளகு,சீரகம்,மிளகாய் வறுத்து மிக்ஸியில்

பொடிக்கவும்.தக்காளியை அரைத்து நீரில் கரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும்.

பின் ரசப் பொடி அரைத்ததை சேர்க்கவும்.நீர் தேவையான அளவு விடவும்.உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.இறுதியில்

ஆரஞ்சு சாறு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.நல்லெண்ணையில் கடுகு,பச்சை மிளகாய்

தாளிக்கவும்.கொத்தமல்லி,கருவேப்பிலை அலங்கரிக்கவும்.ஆரஞ்சு தோலை சிறியதாக நறுக்கி மேலே மிதக்க விடவும்.

விரும்பினால் வெந்த துவரம் பருப்புக் கூட ஒரு கரண்டி சேர்க்கலாம்.

1-5 நபர்கள் வரை
15 முதல் 30 நிமிடங்கள்