தூதுவளை ரசம்

V SUMITHRA
பிப்ரவரி 20, 2015 03:56 பிப

தேவையான பொருட்கள்

புளி - பெருநெல்லி அளவு

தக்காளி பெரிது - 1

துவரம் பருப்பு வேகவைத்தது - 1 கரண்டி

துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

தணியா - 3 ஸ்பூன்

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

பெருங்காயம் - சிறிது

மிளகாய் - 2

பூண்டு விருப்பமிருந்தால் - 4 பல்

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

தூதுவளை இலை ஆய்ந்தது - 1 பிடி

தாளிக்க 

நல்லெண்ணை,கடுகு,பச்சை மிளகாய் -1

தயாரிக்கும் முறை

முதலில் வாணலியில் துவரம் பருப்பு  1 ஸ்பூன்,தணியா,மிளகு,சீரகம்,மிளகாய் - 2,பூண்டு,தூதுவளை இலை எல்லாம்

வறுத்து தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். புளியை  நீரில்  கரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க

விடவும்.

கொதித்த பின் ரச மசாலாவை சேர்க்கவும். வேகவைத்தப் பருப்பை சேர்த்து, உப்பு சேர்க்கவும்.வாசனை வந்ததும் இறக்கி

நல்லெண்ணையில் கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து

அலங்கரிக்கவும். தூதுவளை சளி,ஆஸ்மா நோயாளிகளுக்கு நல்லது.எலும்பு பலவீனத்துக்கு நல்லது.இரும்புச் சத்து

நிறைந்தது.

1-5 நபர்கள் வரை
15 முதல் 30 நிமிடங்கள்