கருவேப்பிலைக் குழம்பு

V SUMITHRA
பிப்ரவரி 19, 2015 03:48 பிப

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை - 1/2 கப்

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்

தணியா - 5 ஸ்பூன்

மிளகாய்- 8 

மிளகு - 1 ஸ்பூன்

சுக்கு - சிறு துண்டு

வெந்தயம் - 1 ஸ்பூன்

கொப்பரை - 3 ஸ்பூன் விரும்பினால்

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கேற்ப

பெருங்காயம்-சிறிது

மஞ்சள் தூள்

தாளிக்க

நல்லெண்ணை ,கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை

தயாரிக்கும் முறை

புளியை ஊற விடவும்.வாணலியில் துவரம் பருப்பு,கடலைப் பருப்பு,தணியா,மிளகாய்,மிளகு,சுக்கு,வெந்தயம்,பெருங்காயம்,கொப்பரை,கருவேப்பிலை  வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து,புளியை கரைத்து

ஊற்றி,மஞ்சள் தூள் சேர்க்கவும்.கொதித்தவுடன் அரைத்த மசாலாவை போட்டு,உப்பு சேர்க்கவும்.

எண்ணை கசிந்து மேலே வந்ததும் இறக்கவும்.கருவேப்பிலை தூவி பறிமாறவும்.கருவேப்பிலைக் குழம்பு செறிமானத்தை தூண்டும்.பித்தம் சரி செய்யும்.

1-5 நபர்கள் வரை
15 முதல் 30 நிமிடங்கள்