அத்தை மகளே_31

முகில் நிலா
பிப்ரவரி 18, 2015 05:05 பிப
வெட்டவெளி பொட்டலிலே
விறகு பொறுக்க போறயேடி
உன் காலில் முள்ளுதச்சா
என் நெஞ்சுக்குழி நோகுமடி,,,,,,

கருக்கருவா கையில் எடுத்து
கருதருக்க நீ குனிஞ்சா
அருவா பிடியாக மாறச்சொல்லி
என் மனசு என்னை கெஞ்சுதடி......

சந்தனத்தில் செஞ்சுவச்ச சிலையே
சம்மதம் நீ சொல்லிவிடு முறையே
சகலமும் அடங்குதடி உன்னால
நான் சக்கரையா கரையிரேன் தன்னால....

கம்மாயில் தண்ணி வத்தி நாளாச்சி
உன்ன கண்டதுமே நெஞ்சுக்குள்ள நோவாச்சி
பூ போட்ட சீலையிலே ரதியாட்டம்
பூடகமா நீ பாக்குறப்போ எனக்குள்ள பனிமூட்டம்.....

வெயில் கால வெள்ளரியா இருக்குற
வெட்கம் விட்டு குடிக்க நான் துடிக்கிறேன்
வேட்டி கட்டி நின்னாலும் நான் சிங்கம்தான்
வேண்டிக்கடி உனக்கு என்ன வேணும் வரம்தான்.....

வில்லு வண்டி கட்டி வந்து முறையா
உன்ன பொண்ணு கேட்க போறேன்டி சரியா
தாலி கட்டி எனக்கு நீ மனைவியா
வாழ வர வேணுமடி நல்ல துணைவியா......