மீல்மேக்கர் பகோடா

V SUMITHRA
பிப்ரவரி 17, 2015 03:27 பிப

தேவையான பொருட்கள்

 

மீல்மேக்கர்  -  12

அரிசி மாவு  - 1 கப்

வெங்காயம் கட் செய்தது - 1/2 கப்

இஞ்சி - சிறிதாக நறுக்கியது

கருவேப்பிலை - சிறிது நறுக்கியது

கொத்தமல்லி - சிறிது நறுக்கியது

பச்சைமிளகாய்- 2 நறுக்கியது

மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

உப்பு -  தேவைக்கேற்ப

பொரிக்க எண்ணை - தேவைக்கேற்ப

 

 

தயாரிக்கும் முறை

 

முதலில் மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் வைத்து,பிறகு அலசி பிழிந்து மிக்ஸியில் அரைக்கவும்.

பின்னர் அதில் அரிசி மாவு,உப்பு,மிளகாய்த்தூள்,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,இஞ்சி

எல்லாம் சேர்த்து பிசையவும்.தேவைப்பட்டால் நீர் தெளித்துப் பிசைந்து,எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

இது சாம்பார் சாதம்,கலந்த சாதங்கள் போன்றவற்றுடன்  தொட்டுக்கவும்,ஸ்நாக்ஸ் க்கும் நன்றாக இருக்கும்.

1-5 நபர்கள் வரை
15 முதல் 30 நிமிடங்கள்