என் ஆசை மாமாவே.....

முகில் நிலா
பிப்ரவரி 08, 2015 12:56 பிப
மாமா உன்னைத்தான்
மனசு தினம் சுத்துது
நெஞ்சுக் குழி உன் பேர
கவுளி போல கத்துது....

கண்ண மூடிக்கிட்டு
கனவுல நான் பேசுறேன்
காது இரண்டுலையும்
உன் சத்தம் மட்டும் கேக்குறேன்.....

வேர்த்து நீ வேலைசெய்ய
நான் விசிறிதான் வீசட்டுமா
வேர்வை துடைச்சிக்க
என் முந்தாணை தரட்டுமா...

மேலு காலு வலிச்சாக்க
அமுக்கி விட வரட்டுமா?
மெதுவா நீ கண் அசைச்சா
மெட்டு நானும் படிக்கட்டுமா?

வீட்டுத் திண்ணையில
உன் மடிமேல உக்காந்து
வெத்தல பாக்கோட நான்
சுண்ணாம்பு தடவட்டுமா?

ஆடிப் பெருக்குல தான்
ஆத்துல நாம குளிப்போமா
ஆசை மாமா உன் முதுக தேய்ச்சு
என் விரலுக்கு மோட்சம் கொடுக்கட்டுமா?

அஞ்சு முழம் பூ வாங்கி
என் தலையில நீ வச்சிவிடு
அவஸ்த்தையெல்லாம் தீரும் வரை
அணைச்சிக்கிட்டு முத்தம் இடு....