அத்தை மகளே_ 30

முகில் நிலா
பிப்ரவரி 02, 2015 11:07 முப

தண்ணியில மீனாட்டம்

தனியா அவ நீந்துறா

முந்தாணை சீலையில

முடிச்சா என்ன முடியுறா.....

 

இடுப்பு மடிப்ப காட்டி

இதாமா அவ நெளியுறா

இச்சுன்னு முத்தம் வைக்க

இடம் தேட வைக்குறா?

 

கெண்டக்காலு கண்டதுமே

கண்ணுக்குள்ள வேர்க்கிது

கெணத்து மீனாட்டம்

என் மனசு கிடந்து துடிக்கிது......

 

கைய ரெண்டும் நீட்டி நீட்டி

அவ கம்மாயில் குளிக்கிறா

கண்டபடி என் மனச

அவ அலையவிட்டு ரசிக்கிறா.....

 

கோவை பழமாட்டம்

அவ உதடுதான் சிவந்திருக்கு

கொத்தா கவ்விடத்தான்

என் பல்வரிசை பதறது....

 

காலால கோலம்பட்டபடி

அவ கரைமேல நடக்குறா

என்ன கண்டதுமே புள்ளி மானாட்டம்

அவ துள்ளித்தான் மறையுறா.....

 

சிறுக்கி அவ என்னையுமே

சில்வண்டா நினைக்கிறா

சிறுத்தை போல என் சீற்றத்த

சிரிச்சே அவ அடக்குறா.....

 

ஆத்து தண்ணி கூட

என் சூட்டத்தணிக்காது

அத்தமக  முத்தம் வைக்கும்வரை

என் அவஸ்த்தையுமே தீராது.....