மீண்டும் வேண்டும் பாரதி

கவிதாயினி
ஜனவரி 24, 2015 12:41 பிப

மீண்டும் வேண்டும் பாரதி
*************************************

பாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டது
புரட்சி பெண்களாய் வரவேண்டும் என்றாய்.....!

பெண் சிங்கங்களாகவே பிறப்பெடுத்து 
வேட்டையாட தயாராய் இருக்கிறோம்........!

நீ பிறந்த தேசத்தில் 
நீ கண்ட கனவுகளை 
நீ சொன்ன சாதனைகளை படைக்க
இன்னும் எத்துணை பிறப்பெடுத்தாலும்
நான் பெண்ணாகவே பிறக்கவேண்டும்.......!

அடுப்பூதிய பெண்கள் இன்று
ஆட்சி நடத்தி அங்கீகாரம் பெறுகின்றனர்.......!

மதிப்பெண் பட்டியலிலும் 
சாதனை பட்டியலிலும்
நீண்டு கிடக்கிறது பெண்களின் சாதனை 
ஆண்களை காட்டிலும்......!

குளத்து நீராய் இருந்த பெண்கள் 
இன்று வற்றா நதிகளாய் மாறி 
கடலில் சங்கமித்து பரைசாற்றுகின்றனர்
அவர்களின் சாதனைகளை.........!

சற்றே ஒரு பயம் 
வரும் காலங்களில் பெண்களை
போதை பொருள்களாய் மாற்றி 
அழித்துவிடுவார்களோ சில மனித மிருகங்கள்....?

ஆம் பாரதி
மூன்று வயது குழந்தையின் கற்புக்குகூட இங்கு பாதுகாப்பில்லை
புரட்சி பெண்ணாய் பிறந்தாலும் புலியாய் பாய அவகாசம் தேவை......!

அவகாசத்தைக்கூட தட்டிப்பறித்து 
அவமான சின்த்தை பதித்து 
பூ மலரும் முன்னே கசக்கி எரிந்து 
மண்ணுக்குள் புதைக்கிறார்கள் அவர்களின் எதிர்காலத்தை 
சில காம வெறிபிடித்த அரக்கர்கள்.......!

பாரதி உனக்கு இன்னும் ஓர் பிறப்பொன்று இருந்தால்
நீ என் தேசத்திலே பிறக்கவேண்டும்......

நீ கண்ட கனவுகள் நினைவானதை 
நீ பார்க்க வேண்டும்
காமத் தீயில் கருகும் பூக்களை கரைசேர்க்க 

நீ வர வேண்டும்........

ரேவதி.........