இதமான இரவினில் - நாகூர் கவி

நாகூர் கவி
ஜனவரி 15, 2015 01:55 முப

இதமான இரவினில்
இதழோர உறவினில்...
இன்பங்கள் பொங்கிட
இளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...


தலையணைகள் தேவையில்லை
தலையணைப்புகள் தேவை
தினம் உன் சேவை.....!

விழிகளின் தீண்டலின் சீண்டலில்
பத்தி எரிகிறதே என்தேகம்....
நயகரா நீர்வீழ்ச்சியினைப்போல்
உடலெங்கும் வியர்வை வழிந்தோடுகிறது
காரணம் உன்மோகம்....!குறுகுறு பார்வையால்
குறும்பாவை நான் மறந்தேன்....
குறும்பானப் பாவையின் துணைக்கொண்டு
நெடும்பாக்களெல்லாம் இரவெல்லாம் வடித்தேன்...!


சூரியனும் சந்திரனும்
நாணத்தால் மறைந்திடுமாம்...
பகலெல்லாம் இரவெல்லாம்
மாறி மாறி நாம்
பொழியும் முத்த மழையாலே...!அடி காதலியே....
இந்த காதலனின்
காதலின் நாடியை பாரடியே....!

உன் இதழ்களால் துவைத்திடு
என் இதழ்களை சுவைத்திடு
காயமோ ஏற்பட்டால்
நியாயமாய் மீண்டும்
முத்தத்தால் மறுபடியும்
ஒத்தடம் கொடுத்திடு....!
காதல் நீயாக
கண்ணில் தெரிகிறதே...
காமம் தீயாக
என்னில் எரிகிறதே....
இப்படியே பொழுதுகள் நீளாதோ....?
தங்கு தடையின்றி தினமும் செல்லாதோ....?