என் கண்களுக்கேனடி... அழச்சொல்லிக் கொடுத்தாய் ? - ( கள்ளி - 02 )

ஒருவன்
ஜனவரி 03, 2015 09:45 பிப

 

என் கண்களுக்கேனடி...  அழச்சொல்லிக் கொடுத்தாய் ?
நம் காதலுக்கேனடி.... பிரிவை அளித்தாய் ?
எரிமலைக் குழம்பினை    அள்ளித் தெளித்தாய்....!
உயிரோடு  இதயத்தைக்    கிள்ளி எடுத்தாய்...


!!


பட்டாம் பூச்சி போல...
என் இதயத்தில்  நீவந்து அமர்ந்தாய்!
காதல் தேனைப் பருகி...
ஏன்  தூரப் பறந்து மறைந்தாய்? 


காத்தில பறக்கிற பஞ்சாய்
என்னை ஏனடி அலைய விட்டாய்?
சேத்தில விழுந்த கல்லாய்
ஏனடி என்னை புதையவிட்டாய்?
உயிரது தன் உணர்வினைத் தேடும்
உண்மைக்குப் பெயர்தான் காதல் !
உன் பொய்மைக்குள் புதைந்த
அன்பினைத் தேடி அலைவதுதானா சாதல் ?
 

என்னை மறுத்தாய்...  உறவை அறுத்தாய்...!
காதலை மறந்தாய்.... பாதியில் மறைந்தாய்...!         
(2)
                                                                           

                                                                      (என் கண்களுக்கேனடி...)


வானத்தில வந்துபோற மின்னலைப்போல
என் வாழ்வில  ஏனடி வந்து போனாய்?
அளவில்லாக் காதலை நான் தந்ததாலா...
ஆறாத வலிகளை நீ    தந்து போனாய்! வேரை விழுங்கும்  மண்ணாய் என்னை
உனக்குள் இழுத்தாய் பெண்ணே..!
இன்று... பட்ட மரமாய் நானும்
பாலை  வனத்தில்  தானே...!!
வெள்ளை மனசென நினைச்சேதான்
கொள்ளை போனதென் மனசு!!
உன்னை உசிரென நினைச்சேதான்
தடுமாறிப்போனதே.....வயசு !
 

என்னை மறுத்தாய்...  உறவை அறுத்தாய்...!
காதலை மறந்தாய்.... பாதியில் மறைந்தாய்...!           (
2)
                                                                       

                                                                      (என் கண்களுக்கேனடி...)

*********************************************************************************************************

பாடல் வரிகள்  :  ஒருவன்

 

 

குறிப்பு  :

 

"கள்ளி" - கண்களால் களவாடுவாள்....... இசைத் தொகுப்புக்கான இரண்டாவது பாடலின் வரிகளில் இருந்து........