பெரும் பயறு சுண்டல்

வினோத் கன்னியாகுமரி
டிசம்பர் 18, 2014 02:35 முப

தேவையான பொருட்கள்

பெரும்பயறு கால் கிலோ

தயாரிக்கும் முறை


பெரும் பயறு சாதாரண பயறை விட பெரிய அளவில் இருக்கும். கடைகளில் கிடைக்கும்.
இப்பயிறை எவ்வாறு எளிதாக பயன்படுத்துவது என்பதை இங்கே காண்போம். சாதாரண பயறு பயன்படும் அனைத்து சமையலுக்கும் பெரும்பயறை பயன்படுத்தலாம். ஆனாலும் இப்பயிரை காலையிலோ மாலையிலோ தேநீருடன் கூட்டுணவாக பயன்படுத்துவது கிராமங்களில் பழக்கம்.
ருசியாக இருக்கும் என்பதால் சிறுவர்களுக்கு பிடிக்கும். சத்தானதும் கூட.


எப்படி சமைப்பது?


மிக எளிது.

பயிறை நீர் விட்டு கழுவிவிட்டு கற்கள் நீக்கி பின் தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும். சிறிது வெந்த பின் சிறிது உப்பு சேர்த்து சமைத்து எடுத்துவிடலாம். முதலிலேயே உப்பு போட்டால் வேக நேரம் ஆகும்.

ஓரளவு மசியவிட்டாலும் நன்றாக இருக்கும். கல் போல வேகாமல் இருந்தால் நன்றாக இருக்காது சாப்பிடவும் விருப்பமிருக்காது.

பயிறு சமைக்கும் நீரில் சத்து அதிகம் சேரும் என்பதால் நீர் ஓரளவிற்கு வற்றும் அளவிற்கு வேகவிட்டால் நல்லது. அதற்கேற்ப நீரின் அளவை கைப்பக்குவம் செய்து கொண்டு நீர் விடுவது நல்லது.

 

சாப்பிடும் முறை

  1. பயிறில் நீர் நீக்கிவிட்டு சாதாரண சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அல்லது
  2. கிராமங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்துவார்கள். அதன் சுவையே தனி.

 

இனிப்பு பிடிக்காதவர்கள்

  1. ஒரு வாணலியில் தாளிக்க சிறிது எண்ணை விட்டு, அதனுடன் வெங்காயம் சிறிது நறுக்கியது மற்றும் தாளிக்க தேவையான பொருட்கள் சிறிது புதினா கீரை அல்லது மல்லி கீரை போட்டு வெந்ததும் பயிறையும் நீரில்லாமல் போட்டு தாளித்து சாப்பிடலாம்.
  2. குழாய் புட்டு சாப்பிட இப்பயிறையோ அல்லது சாதாரண பயிறையோ நன்றாக மசிய சமைத்து கூட்டாக பயன்படுத்தலாம்.
  3. கஞ்சியாக வைப்பதாக இருந்தால், பயறை தனியாக வேகிக்காமல், அரிசியுடன் சேர்த்து வேக விட்டு சிறிது தேங்காய் துருவல் போட்டு இறக்கி உப்பு சேர்த்து கஞ்சியாக குடிக்கலாம்.

அடிக்கடி இவ்வாறு பயிறு கடலை கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்களது உடலுக்கு தேவையான முக்கியமான விட்டமின்கள் சம அளவில் கிடைக்கும்.

சாதாரண பயறைப்போலவே பெரும்பயறும் மிகவும் சத்தானது. ஆனால் அதிகம் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறுது. பழங்காலங்களில் பயறுவகைகள் கிராமங்களில் கிழங்கு பயிரிடும் போது அதனுடன் ஊடுபயிராக வளர்க்கப்பட்டது. பயறு ஊடுபயிராக போடுவதால் மண்ணில் சத்துகள் சேமிக்கப்பட்டது. இப்போது இவ்வகை ஊடுபயிறை பயிரிட விவசாய அதிகாரிகள் அறிவுரை கூறுகிறார்கள்.

 

(படங்கள் இணையம்)

1-2 நபர்கள்
15 முதல் 30 நிமிடங்கள்