பைரவக்காடு

kaaviyan
kaaviyan சிறப்பு பதிவு
ஆகஸ்ட் 22, 2014 08:52 முப

குறிப்பு:

இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டவை.... கர்ப்பினி பெண்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்..... மீறி படிக்கும் பட்சத்தில் விளைவுகளுக்கு படைப்பாளியோ, “தமிழ் நண்பர்கள்” தளமோ பொறுப்பேற்காது.

நன்றி

காவியன்

பைரவக்காடு

உங்களையெல்லாம் வேலைக்கு வச்சத்துக்கு ......................................................... என்ன எதும் சொல்ல வச்சிராதீங்க பாலா.... வேலை செய்ய இஷ்டம் இருந்தா செய்ங்க.... இல்லைனா தயவு செஞ்சு போயிருங்க...... உங்கள மாதிரி ஆயிரம் பேர் எனக்கு கிடைப்பான்.....  காசு குடுத்தவன், வேலை என்னாச்சுன்னு??!!, இன்னும் 15 நாள்ல வந்து நிப்பான்... அப்ப நான் தான் பதில் சொல்லனும்..... உங்களுக்கு என்ன ?

தன் உயரதிகாரி திட்டிய கோபத்தில், பாலா கதவை வேகமாக திறந்து வெளியே வந்தான்... இதற்கு முன் பாலா இப்படி யாரிடமும் திட்டு வாங்கியதில்லை என்பதால் மிகுந்த வருத்தத்துடனும், கோபத்துடனும் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான்....

விடு மாப்ள அந்தாள பத்திதான் நமக்கு தெரியும்ல வா வெளியே போலாம்....  டேனியல் தெம்பூட்டி அழைத்துச்சென்றான்.....

நாயர்..... ரெண்டுல ஒரு பால் சொல்லிவிட்டு பேப்பரை எடுத்துபார்த்தவரே பாலா அருகில் அமர்ந்தான் டேனியல்.. என்னடா மச்சான் அத பத்தியே யோசிச்சுட்டு இருக்கயா?!!.... இந்தா இத படி என்று அவன் தொடையைத்தட்டி  நக்கலாய் படித்துக் காட்டினான் .....

“தன்னை எந்த கட்சியாவது கூப்பிட்டால்  அரசியலில் குதிக்க தயார்” - நடிகை அறிவிப்பு ..... இதெல்லாம் வரலைன்னு யார் அழுதா?!!!.

நான் தான் அடுத்த பிரதமர் - சாமியார் பளிச்.....அந்த நடிகைக்கும் இந்த சாமியாருக்கும் என்ன தொடர்போ?!!!

டேய் டேனியல்..... இதுக்கு அந்த ஆளே, பரவால டா.... தயவு செஞ்சு மொக்க போடதடா.....

அண்ணே.......................... பால் யாருக்கு ?

குடுப்பா..... 

டேய் மச்சான் இங்க பாத்தியா ? பரவசமாக படித்தான்!!!!!

“பைரவ காட்டில் மீண்டும் இருவர் மாயம்”....

டேய் டேனியல்..... உள்ள படி..... பாலாவும் ஆர்வமானான்.....

“பைரவ காட்டில் மீண்டும் இருவர் மாயம்”......

பள்ளிபாளையம் அடுத்த கொக்கராயன்பேட்டையில் இருந்து கரூர் செல்லும் வழியில் பைரவக்காடு எனும் பகுதி உள்ளது..... அதற்கு கொக்கராயன்பேட்டையில் உள்ள அடிப்பாலத்தை கடந்து தான் செல்ல முடியும்.... அந்த அடிப்பாலத்தை கடப்பவர்கள் அமானுஷ்ய சக்தியை உணர்வதாகவும், ஏதோ உருவம் அவர்களை கடப்பதாகவும் சிறிது நேரத்தில் மறைந்து விடுவதாகவும் கூறுகின்றனர்.... மேலும் இரவு 12 மணிக்கு மேல் அந்த அடிப்பாலத்தை கடப்பவர்கள் மாயமாவதாகவும் அப்பகுதி மக்கள் கூறிவருவது தொடர்கதையாகி வருகிறது.... அதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இரவில் அந்த பாலத்தை கடந்து செல்லும்போது காவல்துறை உயர் அதிகாரியின் மகளும், அவரது நண்பரும் காணாமல் போயுள்ளனர்.

இருவரும் காணாமல்போனது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர் காவல்துறை உயர் அதிகாரியின் மகள் என்பதால், தேடுதலில் முழு வீச்சில் இறங்கியுள்ளதாக நம்ப கூடிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.  

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

டேய் பாலா.... என்னாட இது..... ரெண்டு பேர காணோமாமா !!!.......

டேனி..... அந்த ரெண்டு பேரும் வேற எங்கயாவது போயிருப்பாங்க.... இல்ல வேற எதாவது காரணமா இருக்கும்.....பேய்ங்கறதெல்லாம் ஒன்னும் இல்லடா.... அதெல்லாம் சும்மா இந்த காலத்துலபோய் பேய் கீய்’ன்னுட்டு..... அதெல்லாம் சமூக விரோத செயல்ல ஈடுபடரத்துக்கு, அவனவன் எட்டு கட்டுன கட்டுக்கத மச்சி...

இல்ல மச்சான்.... போன ஞாயித்து கிழமைக்கூட பார்த்தேன்.... ஒரு அம்மா அவங்க பொண்ண மாதா கோயிலுக்கு கூட்டிட்டு வந்தாங்க.... பயங்கர சத்தம்..... பார்க்கவே பயமா இருந்துச்சு.... அப்ப கூட அந்த பொண்ணு என்னையவே பார்த்துச்சு தெரியுமா??!!!

அதற்குள், பாலாவின் அலைப்பேசி சிணுங்கிட, பாலா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்....

பாலாவின் முகம் மாறியது.....

நான் என் நண்பரோட இருக்கேன்.... வீட்டுக்கு வந்து கூப்படறேன்.....

டேய் டேனி......  நான் அவசரமா ஒரு பக்கம் போகனும்.... நாயருக்கு காசு குடுத்துரு.... என்று வெளிரிய முகத்துடன் வந்த வியர்வையை பொருட்படுத்தாமல் விரைந்தான் பாலா.!!!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

வீட்டுக்கு சென்றும், பாலா தான் படித்ததைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்..... அவனால், நாளிதழ் செய்தியை மறக்க முடியவில்லை, உள்ளூர ஏதோ ஒன்று உணர்த்திய சமயம் அவனது தோழி ஸ்வேதாவின் அழைப்பில் அலைப்பேசி பிளிறியது..........

ஒரு மாத சண்டைக்கு பிறகு இன்று தான் ஸ்வேதா, பாலாவிற்கு அழைக்கிறாள்.....

ம் சொல்லுங்க....

இன்னும் கோபம் தீரலையா பாலா ? நல்லாருக்கியா ?

ம் இருக்கேன்....  

நான் ஒரு விஷயம் உன்னிடம் சொல்லனும்....

ம் சொல்லு....

டேய் பாலா.... தயவு செய்து என்னை மன்னிச்சுரு..... என்னோட பிறந்த நாளுக்கு நீ எவ்வளோ தயார் பண்ணிருந்தேன்னு தெரியும்.... ஆனா அன்னைக்குன்னு பார்த்து ஊர்ல இருந்து அண்ணா வந்துட்டான்.... நான் அவங்க கூட போக வேண்டியது ஆயிருச்சு.... நான் என்ன செய்ய முடியும் சொல்லு இதுக்கு இவ்ளோ கோவமாடா ??

சரி பாலா....எல்லாமே என்னோட தப்புதான்.... இனிமே இப்படி நடக்காது என்று கெஞ்சலில் இறங்கினாள்

கெஞ்சலிலும் அவளது பதட்டத்தை உணர்ந்தான் பாலா....

தயவு செய்து பழச பேசாத..... விடு ஸ்வேதா .....

எனக்கு உன்ன பார்க்கனும் பாலா.... இப்பவே பார்க்கனும் ...

சரி நாளைக்கு கோயிலுக்கு வா.... பார்க்கலாம்....

இன்னைக்கு நாளிதழ் படிச்சயா  பாலா ? என்று ஆர்வமானாள்

“பைரவ காட்டில் இருவர் மாயம்” ன்னு...... வந்திருந்துச்சே அது பற்றி எனக்கு குழப்பமாவும் உருத்தலாவும் இருக்குடா அதுபத்தி உங்கிட்ட நிறைய பேசனும் பாலா

பாலாவின் புருவம் உயர்ந்தது...

ஆமா ஸ்வேதா நானும் படித்தேன்.....

பாலா.... நாம நாளைக்கு அங்க போலாமா ? எப்படியாவது அந்த இடத்துக்கு போய், உண்மையா நடந்தது என்னன்னு கண்டுபுடிக்கனும்... அதுக்கும் மேல, அந்த பொண்ணு பாவம் இல்ல.....

சரி ஸ்வேதா இந்த விஷயத்துல நீ ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டறனு தெரிஞ்சுக்கலாமா? நீ கதை எழுதறன்றதால ஏதாவது சுவாரஷ்யம் கிடைக்கும்னு பார்க்கிறயா இல்ல நீயும் காவல் அதிகாரி   பொண்ணுங்கிறதால உன் இனத்துப்பாசமா????

பாலா...... என் வாயாக்கிளராத..... எதையும் ஆராயமா அப்படியே நம்பறதும் முட்டாள் தனமா எதாவது கிளப்பி மக்களை மூடபழக்கத்துல மூழ்கடிக்கறத பார்த்துட்டு சும்மா இருக்கறதும் முடியாது.... உண்மை தெரியனும் அதான் காரணம்  

கண்டிப்பா டி..... எனக்கும் அதான் தோனுச்சு.... இந்த காலத்துலயும் இப்படி ஒரு செய்தி படிக்கறக்கு சிரிப்பாவும் வேதனையாவும் இருந்துச்சு அங்கபோய் பார்க்கனும்ங்கிறத பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன். நீயும் அதையே கேட்டுட்ட ஆனா நீயெல்லாம் அங்க வேண்டாம்.... நானும் டேனியும் மட்டும் போறோம்....

ஏன் பாலா... எனக்கெதாவது ஆயிருமோன்னு பயமா இருக்கா ?

சீ சீ...... அப்படில்லாம் இல்லடி.... இருந்தாலும் நீ வேண்டாம்... நானும் டேனியும் போறோம்.....

சரி டா....நீ சொன்னத நான் என்னைக்கு மீறீறிருக்கிறேன்.....

சரி மா.... நீயும்  வள்ளுவன் காணாத வாசுகி தான்..... என் செலவுல, உனக்கு ஒரு சிலையே வச்சிடறேன்....

நீ மட்டும் இந்த வேலைய முடுச்சுட்டா நான் தான் உனக்கு சிலை வைக்கனும் பாலா.....

சரி டி .... நாளைக்கு காலைல டேனி பயட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன்....

சரிடா பாலா.... மறுபடியும் என்னை மன்னிச்சுரு.... வச்சிடறேன் ம்ம்ம்....

மன்னிப்பு தமிழ்ல புடிக்காதா ஒரே வார்த்தை மறந்துட்டேன் நீ எதையும் நினைக்காம நிம்மதியா தூங்கு ஸ்வேதா.....

* * * * * * * * * * * * * *

டேனி: என்னது................................ பைரவக்காட்டுக்கா ?

இன்னைக்கு ராத்திரி 12 மணிக்கா ?

நீயும் நானுமா ?

பேசமா போயுடு.....

பாலா:டேய் டேனி..... நீ வரதுன்னா வா..... இல்லைனா நான் போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.....

டேனி:மச்சி.... சொன்னா புருஞ்சுக்கோ..... நெருப்பத்தொட்டா சுடும்னு நான் சொல்றேன்... நீ தொட்டு தான் பார்பேன்னு நிக்கற....

பாலா:டேனி.... நீயும் பேய் இருக்குன்னு பயப்படறயா ?

டேனி:அதெல்லாம் ஒன்னும் இல்லடா..... ஆனா.... இயற்கைன்னு ஒன்னு இருக்குள்ள........

பாலா:இந்த வேதியல் தனமெல்லாம் எங்கிட்ட பேசாத.... நீ வருவியா ? மாட்டியா ?

டேனி:அது இல்லடா..... டேனி இழுத்தான்.....

பாலா:எல்லாருமே சுயனலமா தாண்டா இருக்கீங்க....

டேனி:தயவு செய்ஞ்சு நீ ஆரம்பிக்காத..... வந்து தொலைக்கிறேன்... வேற வழி....

பாலா:நண்பேண்டா..................................................

டேனி:வச்சுதொலை

பாலா:சரி மச்சி... இரவு 8 மணிக்கு காவேரி பாலத்துக்கிட்ட வந்துரு... அங்க வந்து உன்ன கூட்டிட்டு போறேன்.....

டேனி:பேசாம ஆத்துல என்ன தள்ளி விற்று......

பாலா:என்ன டேனி ?

டேனி:ஒன்னும்மில்லையீயீயீயீயீயீயீயி........ வந்து தொலைக்கறேன்

* * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

இரவு 8 மணி.... இடம்: காவேரி பாலம்

பாலாவும் டேனியலும் வண்டியில் போய் கொண்டிருந்தனர்.....

என்னடா டேனி.... வெள்ளை உடைன்னு பாக்கறதுக்கு உங்க சாமியார் மாறி இருக்க....

சும்மா தான் பாலா.... அம்மா புதுசா எடுத்து வைச்சிருந்தாங்க.... அதான் எடுத்து போட்டுட்டு வந்தேன்.....

எங்கோ மசுதியில் பாங் சத்தம் கேட்டது..... 

அல்லா..... எப்படியாவது என்ன காப்பாத்தி நாளைக்கு எங்க வீட்ல விட்டுடு...... உனக்கு ரெட்டை கிடாவே வெட்றேன்....

டேனி.... நீ எப்படா மதம் மாறுன ?. அதுவும் அல்லாக்கு!! ரெட்டை கிடாவா ? பிரமாதம்

நான் எங்க மாறுனேன்..... எதாவது ஒரு ரூபத்துல கடவுள் வரமாட்டாரான்னு தான்..... ஆனா ஒன்னு பாலா..... உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா.....

 

பைரவக்காடு 15 கி.மீ

 வழிகாட்டி இடது பக்கம் காட்டியது..... அதுவரை, சிரித்து பேசிய இருவரும் சற்று அமைதி ஆனார்கள்.....

நிசப்தம் அவர்கள் குரல்வலையை நெரித்து ஒருவித கிலியை கொணர்ந்தது

பாலா வண்டியை திடிரென நிறுத்தினான்.....

என்னடா பாலா.... பெயர் பலகைய பார்த்துமே, அதுவா நின்னுருச்சு.....

அதுவால்லாம் நிக்கலடா... நான் தான் நிறுத்தினேன்.....

ஏன் ? என்னாச்சு ?

ஒன்னுமில்ல ஸ்வேதாக்கு சொல்றேன்ன்னு சொன்னேன், ஆனா சொல்லவே இல்ல.... அதான்....

சரியென்று தன் சட்டை பையைத் தொடும் பொழுது தான் பாலாவுக்கு தெரிந்தது, தன்னுடைய செல்போன் தொலைந்திருப்பதை.....

பாலாவுக்கு அது சரியாக படவில்லை..... எனினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், டேய் டேனி ! உன்னோட போன்ல ஸ்வேதாவுக்கு கூப்புடு.....

டேனி முயர்ச்சித்தான்.... ஆனால் ஸ்வேதாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.....

பாலாவுக்கு மேலும் அது இனம் புரியாத குழப்பத்தை உருவாக்கியது.....

நாம கூப்படரோம்முன்னு சொன்னோம், ஆனா ஸ்வேதா ஏன் இப்படி பண்ணிட்டா ? பாலா தனக்குள் வினவிய படி வந்தான்....

பைரவக்காடு 6 கி.மீ

பாலா.... இப்பயும் சொல்றேன்.... போயரலாமா ?

பாலா, டேனி சொல்வதை கேட்கவே இல்லை.....

டேய் பாலா.................... டேய் பாலா.................... வண்டிய ய ய நிறுத்து...........

டேனியல் கத்தினான்.....

ஏன் டா டேனி ? என்னாச்சு......

பயத்துல........................................... ஒன்னுமில்ல.....  இந்த எலுமிச்சையை புடி.... நீ இங்கயே நில்லு நான் வந்தரேன்.....

இதென்னடா எலுமிச்சை ?

சும்ம்ம்ம்மா தான்..... டேனியல் மழுப்பினான்.....

1... 2..... 10 நிமிடத்திற்கு மேல் ஆகியும் டேனியல் வரவே இல்லை..... பாலாவிற்கு பதட்டம் பற்றிக்கொண்டது..... என்ன வென்று பார்க்கலாம் என்று வண்டியை விட்டு கீழே இறங்கினான்....

சற்றும் எதிர்பாராமல், டேனியல், பாலாவின் பின் புறம் நின்றான்....

என்ன பாலா.... உனக்கும் வருதா ?

என்ன ? பாலா குழப்பமானான்.....

இல்ல மச்சி... இயற்கை அன்னை உன்னையும் அழைக்கிறாளா ?

துவ்..... மொதல்ல வண்டில ஏறு....... எவ்ளோ நேரமாடா போய்தொலைவ என்றான்

இல்லை மச்சான் என் செயின் முள்ளுல மாட்டிக்கிச்சுடா அதான்டா லேட் என்றவாரே டேனி வண்டியில் ஏறும் பொழுது, ஒரு பெரியவர் தலையில் காவி வண்ணத்தில் முண்டாசு கட்டி, நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருந்தார்..... பார்ப்பதற்கு கோடாங்கி போல் இருந்தார்....

 

ஐயா...... பைரவக்காட்டுக்கு எப்படி போகனும் ?

 

தம்பி இன்னும் ரெண்டு பர்ல்லாங்கு போகனும்.... ஆனா..... ஒரு பர்ல்லாங்குக்கு அடுத்து  அடிப்பாலம் ஒன்னு வரும், அத மட்டும் சீக்கிரமா கடந்து போயிருங்க....

ஏங்கைய்யா ?

அதெல்லாம் கேட்காதீங்க.... இன்னும் மணி இருக்கு, ஒன்னும் பிரச்சனை இல்ல.... ஆனா சீக்கிரமா போயிருங்க...... என்று கூறி பெரியவர் நகர்ந்தார்.....

பாலாவும் டேனியலும் வண்டியில் மெதுவாக நகர்ந்தனர்.... டேனியின் செயினிலிருந்த சிலுவை அந்த முள்செடியில் ஆடிக்கொண்டிருந்தது அறியாமல் இருவரும் சென்றுகொண்டிருந்தனர்

டேய் டேனி......... இப்படித்தான் குஜ்ராத் மாநிலத்தில ஒரு மாசதுக்கு முன்னாடி............ ரெண்டு காதலர்கள், இரவு நேரத்துல, தனியா போய்ட்டு இருந்தாங்களாமா......... அப்ப..........

பாலா..... தயவு செஞ்சு இத்தோட நிறுத்திக்கோ..... நான் ஏற்கனவே நடுங்கிட்டு வந்துட்டு இருக்கேன்.... இதுல நீ வேற....

அது இல்ல டேனி........

திடிரென..... டேனியல் பாலாவின் தோலை இருக்கமாக பிடித்தான்......

பைரவக்காடு 1 கி.மீ

பாலாவும் வண்டியை மெதுவாக நிறுத்தினான்.....

பாலா................

ஆமான்டா டேனி...... இது தான் அந்த அடிப்பாலம்......

அடிப்பாலம் பார்ப்பதற்கே சற்று மிரட்டலாகத்தான் இருந்தது......

மணி இரவு 11.30......

பாலா.... எப்ப உள்ள போலாம்......

இரு மணி 12 ஆகட்டும்...... அதற்குள், டேனி தான் கொண்டு வந்த எலுமிச்சை பழத்தை, நான்காக அறுத்து உள்ளே குங்குமம் தடவிக்கொண்டிருந்தான்....

என்னடா  டேனி பண்ற ?

சும்மா ஒரு எச்சரிக்கைக்கு தான்..... இத நீ கைல வச்சிரு....

நீ வச்சுக்க டா டேனி...

இல்ல மச்சான் எனக்கு சிலுவை இருக்கு..... 

சரியாக மணி இரவு 12 ஆனது......

டேய் பாலா...... என்னடா....... இதுவரைக்கும் வெளிச்சம் நல்லாத்தான்டா இருந்துச்சு.... இப்ப என்னடா.... இவ்வளவு இருட்டா இருக்கு......

பாலாவும் டேனியலும் மெதுவாக அடிப்பாலத்தில் தங்களது முதல் அடியை வைத்தனர்........

அடி எடுத்து வைத்தது தான் தாமதம்.......

காற்று பலமாக வீச தொடங்கியது........ அங்கே ஏதோ நடக்க போகிறது என்று மட்டும் இருவரும் உணர்ந்தனர்.....

டேனியல், பாலவின் கையை இருக்கி பிடித்து கொண்டான்.......

பாலாவிற்கும் இங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உண்ர்ந்தான்......

தீடிரென நிசப்தம் நிலவியது பாலாவும் டேனியலும் கையை விட்டு தனித்தனியாக பிரிந்து நின்றனர்

காற்று மெதுவாக அடங்கியது........... ஆனால் டேனியலின் கண்ணிற்கு பாலாவோ.... இல்லை பாலவின் கண்களுக்கு டேனியலோ தெரியவில்லை..... அந்த அடிப்பாலத்தில் அப்படியொரு இருட்டு.....

டேனி.... ஏதோ சத்தம் கேட்கற மாறி இருக்குடா......

ஆமான்டா.......... பூச்சியா இருக்குமோ !!!!! ??? .

இல்ல மச்சி….  கொலுசு மாறி இருக்குடா.....

தூரமாக ஒரு உருவம் தென்பட்டது.......

இருவருக்கும் திகில் பற்றிக்கொண்டது....... உடல் முழுக்க வியர்த்திருந்தது.....

டேனியல் தன் சிலுவையை பிடித்துக்கொள்ள முயன்றான் ஆனால் அது இல்லாததால் பயத்தில் கத்த ஆரம்பித்தான்.....

 கர்த்தரே...... உன் குழந்தைகளை காப்பாத்துப்பா........

அந்த உருவம் மெல்ல இருவரையும் நோக்கி வந்தது....... இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.....

இருவரும் பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.....

திடிரென அந்த அடிப்பாலம் முழுவதும் வெளிச்சம்.....

பாலா..... அந்த உருவத்தை எங்கோ பார்த்தது போல் ஞாபகம் வந்தது......

ஆனால் பாலாவிற்கு பயத்தில் எதுவுமே புலப்படவில்லை.....

உருவம் அருகில் வந்ததும்..... பாலா அதிர்ச்சி அடைந்தான்.......

பாலா பார்த்தது வேறு யாருமில்லை............................................

அவனது தோழி ஸ்வேதா....... பார்ப்பதற்கே அகோரமாய் இருந்தாள்....

பின்பு தான் பாலாவிற்கு புரிந்தது..... அன்று காணாமல் போனது ஸ்வேதா தான் என்று..........

பாலா, ஸ்வேதா... ஸ்வேதா.... ஸ்வேதா... என்று கத்தினான் ...... ஆனால் பலன் இல்லை.........

ஸ்வேதா பலமாக சிரித்தாள்...... பின்பு டேனியலை வெறித்தனமாக பார்த்து முறைத்தால்..... அன்று மாதா கோவிலில், ஒரு பெண் பார்த்த, அதே பார்வை......

பாலா..... காப்பாத்துடா...... காப்பாத்துடா...... டேனியல் அலறினான்.....

டேனியலை கொல்வதற்கு ஸ்வேதா பாய்ந்தாள்......

பாலா, டேனியல் குடுத்த குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை ஸ்வேதாவின் முன் வேகமாக எறிந்தான்.......

ஸ்வேதாவின் உடை முழுவதும் அது பரவியது.......

பின்பு ஸ்வேதா மறைந்தாள்.....

பாலா பெரு மூச்சு விட்டான்.......

சற்றும் எதிர்பாரமல், ஸ்வேதா டேனியல் முன் மீண்டும் தோன்றினாள்.....

டேனியல் வெளிறிய முகத்துடன் மூச்சடைத்து நின்றான்

ஸ்வேதா, டேனியலின் கழுத்தை கடித்து ரத்ததை குடித்து கொண்டிருந்தாள்..... பாலா பயத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான்.....

தைரியத்தை வரவழித்துக்கொண்டு ஸ்வேதாவின் கைகளைப்பிடிக்க முற்பட்டான்..... ஆனால் பிடிக்க முடியவில்லை.....

டேனியல் வெள்ளை உடை முழுவதும் ரத்ததால் நிரம்பியிருந்தது.....

டேனியலின் ரத்தம் பாலாவின் மேல் பீச்சியடித்தது ......  

தன் உடை முழுக்க ரத்த கரையுடன் ஸ்வேதா, ஒரு ஓரத்தில் அமர்ந்து, மண்ணை அள்ளி தன் மேல் போட்டு கொண்டிருந்தாள்.....

திடிரென அடிபாலம் முழுவதும் இருட்டானது...............

1.......2.........3................ நிமிடங்கள் கடந்தன.....

பின் ஸ்வேதா இருந்த பக்கம் மட்டும் வெளிச்சம் வந்தது ......

ஸ்வேதாவின் உடை இப்பொழுது வெள்ளை நிறம் ஆனது.....

மீண்டும் அடிபாலம் முழுவதும் இருட்டானது...............

பின் டேனியல் இருந்த பக்கம் மட்டும் வெளிச்சம் வந்தது ......

டேனியலும் இப்பொழுது சுத்தமாய் தெரிந்தான்..... அவனது உடையும் வெள்ளை நிறம் ஆனது.....

பாலா குழம்பினான்........ “பைரவ காட்டில் இருவர் மாயம்”  ன்னு நாளிதலில் படித்தவை ஞாபகம் வந்தது.....

அதிர்ச்சி அடைந்தான்.......... பாலா குழப்பத்தில் கண்கலங்கினான்......

ஆமா உங்க உடையெல்லாம் எப்படி பிரகாசிக்குது இங்க என்ன நடக்குது – பாலா வினவினான்....

பின்பு ஒரு மின்னல் ஒளி...... அடிப்பாலம் முழுவதும் பிரகாசமாய் வெளிச்சம்......

பின்பு  ஸ்வேதாவும் டேனியலும் சேர்ந்து நின்று சிரித்து, கோரசாக கூறினர்

“நாங்க உஜாலாவுக்கு மாறிட்டோம்“

எவரும் காணா நேரத்தில், பாலா மீதும் ஒரு மின்னல் ஒளி வீசியது..... அந்த அடிப்பாலம் இன்னும் பிரகாசமாகமானது.....

இம்முறை பாலாவின் உடையும் ரத்த கறை நீங்கியிருந்தது......

பின்பு  ஸ்வேதா, பாலா, டேனியல் மூவரும் சேர்ந்து நின்று கூறினர்

“நாங்களும் உஜாலாவுக்கு மாறிட்டோம்“

அரங்கம் அதிர்ந்தது..... விளம்பர படம் முடிந்தது........

தன் உயர் அதிகாரி எழுந்து வந்து பாலாவை கட்டி பிடித்து நன்றி கூறினார்.....

பாலா...... கண்டிப்பா இந்த விளம்பரம், நம்ம வாடிக்கையாளருக்கு புடிக்கும்..... 15 நாள் குடுத்தேன்..... பரவால 10 நாள்ல முடுச்சுடீங்க...... ரொம்ப பெருசா இருக்கு கொஞ்சம் கம்மி பண்ணிகுங்க......

அப்புறம் கதாபாத்திரம் எல்லாமே நம்ம அலுவலக நபர் பேரையே வச்சுடீங்க.....

அப்புறம் பாலா...... அந்த உயரதிகாரியா நடிச்சாருள்ள அது என்னோட கதாபாத்திரம் இல்லையே...... ஹா ஹா ஹா.....

இல்லீங்க..... உங்கள போய்................. பாலா மழுப்பினான்......

டேனியல் வியர்த்து போய் வெளியே வந்தான்...... உங்களுகெல்லாம் நல்ல சாவே வராதுடா..... கர்த்தரே...... பாவிகளை மன்னியுங்கள்.......

பாலா பெருமையில் சிரித்தான்........ அப்ப அல்லாவுக்கு ரெட்டை கெடா ?