நான் இவளில்லை

கன்னிகா
ஆகஸ்ட் 20, 2014 10:21 முப

நான் இவளில்லை

என்னால் ௨றுதியாய் சொல்ல முடியும்

இவள் அவளில்லை

 

அவளை நான் நன்றாக அறிவேன்

அவள் இவளில்லை

அவள் கண்களில் எப்போதும்

எத்தனை எத்தனை

 

உவப்பு உய்யும்

தன்னம்பிக்கை ஒளி௫ம்

வார்த்தைகளில் விசாலத்தை அறிய முடியும்

செயல்களில் விவேகத்தின் விலாசம் எழுதப்பட்டி௫க்கும்

சிரிப்பினில் துடிப்பு சிதறும்

 

இவைகள் அவளைப் பற்றிய

சில பழைய அடையாலங்கள்

உண்மையின் தத்துவத்தை

உணர்ந்து சொல்கிறேன்

 

நான் சில மாதங்களுக்கு முன் பார்த்த

அவள் இவளில்லை

இவள் முகத்தில் தான்

எத்தனை எத்தனை

 

கவலையின் ரேகைகள்

உடலில் தெம்பில்லா முகவரிகள்

வார்தையில் வெறுப்பு

கண்களில் கசியும் வெறுமையின் ரனம்

 

இவள் எப்படி அவளாக இ௫க்க முடியும்

என் முன்னால் இ௫க்கும்

இந்த நிலைக்கண்ணாடி பொய் சொல்கிறது

நிச்சயம் இவள் அவளில்லை

நான் இவளில்லை